சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அணியின் வருகை ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க அணியும் தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது.
தோனி சாதனை
டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த முதல் கேப்டன் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். கடந்த புதன்கிழமை (நேற்று) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனி இந்தச் சாதனையைப் படைத்தார். 36 பந்துகளில் 70 ரன்களைக் குவித்த தோனி இறுதி வரை வெளியேறாமல் களத்தில் இருந்தார். 36 வயதாகும் தோனி இதுவரை குவித்துள்ள 5786 ரன்களில் 5010 ரன்கள் அவர் அணியின் கேப்டனாக இருந்து எடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தாராளமாகத் தல தோனிக்கு ஒரு விசில் போடலாம்.
Be the first to comment on "டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோனி"