ஈரோடு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் ஈரோடு வ.உ.சி மைதானத்தில் பிரம்மாண்டம்மான புத்தகத் திருவிழா நடைபெறுவது தான். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலக்கியப் போட்டிகள், பிரபலங்களின் உரை என்று பல நிகழ்வுகள் மூலமாக மக்கள் சிந்தனைப் பேரவை மக்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வருடத்துடன் பதிநான்காம் ஆண்டு ஆகிறது. முதல் வருடத்தில் எப்படி கூட்டம் இருந்ததோ அதைவிட இத்தனை ஆண்டுகளில் பல மடங்குப் பெருகி இருக்கிறது மக்களின் கூட்டம்.
புதிய வெளியீடுகள்: முக்கியமான பதிப்பகங்கள்
தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான பதிப்பகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகமும் காலச்சுவடு பதிப்பகமும் புத்தகத் திருவிழாக்களில் சில புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறது.
எஸ். ஜெயசீல ஸ்டீபன் எழுதிய தமிழ் மக்கள் வரலாறு காலனியத் தொடக்க காலம், கன்னையா குமார் எழுதிய பீகாரிலிருந்து திகார் வரை எனது அரசியல் பயணம், ராஜ் கௌதமனின் எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம், குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள் போன்ற புத்தகங்கள் நியூசெஞ்சுரி புக் ஹவுஸின் புதிய வெளியீடுகளாக வந்துள்ளது.
இசை எழுதிய வாழ்க்கைக்கு வெளியே பேசுதல், ஆசி. கந்தராஜா எழுதிய கள்ளக்கணக்கு, பெருமாள் முருகன் எழுதிய நிலமும் நிழலும், எழிலரசி எழுதிய பெருஞ்சுறை போன்ற புத்தகங்களை காலச்சுவடு பதிப்பமும் புதிய வெளியீடாக வெளியிட்டு உள்ளது.
ஜெயமோகனின் மகாபாரதம் நாவல் வரிசை: வெண்முரசு, இயக்குநர் ஜெயபாரதி எழுதிய சினிமாக்காரர்கள், ஹாலாஸ்யன் எழுதிய சிள்வண்டு முதல் சிகாபைட்ஸ் வரை, மருத்துவர் சுதாமன் எழுதிய வருங்கால தமிழகம் யாருக்கு போன்ற புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம் புதிய வெளியீடாக வெளியிட்டு உள்ளது.
வேற்று மொழியில் கென்னத் ஆண்டர்சன் வந்து தமிழில் பா.கமல்நாத் எழுதிய ஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும், விட்டல்ராவ் எழுதிய நிலநடுக்கோடு, த.வி. வெங்கடேஷ்வரன் எழுதிய தேனி நியூட்ரினோ திட்டம் அச்சங்களும் அறிவியலும், ஆயிஷா. இரா. நடராஜன் எழுதிய இந்தியக் கல்விப் போராளிகள் போன்ற புத்தகங்களை பாரதி புத்தகாலயம் புதிய வெளியீடாக வெளியிட்டு உள்ளது.
வேற்று மொழியில் ஸ்வாதி சதுர்வேதி எழுதி தமிழில் இரா. செந்தில் எழுதிய நான் ஒரு ட்ரால், வேற்று மொழியில் ஆலிவர் சேக்ஸ் எழுதி தமிழில் வின்சென்ட் எழுதிய தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர் போன்ற புத்தகங்களை புதிய வெளியீடாக எதிர் வெளியீடு வெளியிட்டு உள்ளது.
எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய மனைமாட்சி என்ற புத்தகத்தை புதிய வெளியீடாக தமிழினி பதிப்பகமும் வெளியிட்டு உள்ளது.
எழுத்தாளர் வாசகர் சந்திப்பு
இது மட்டுமின்றி ஈரோடு புத்தகத் திருவிழாவில் வருகிற புதன் (ஆகஸ்ட் 8 மாலை) கிழமை அன்று தன்னுடைய சொந்தப் பதிப்பகமான தேசாந்திரி பதிப்பகம் விற்பனை நிலையத்தில் தனது வாசகர்களுடனான சந்திப்புக் கூட்டம் நடத்த இருக்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். அதே போல வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபல கதைசொல்லி, எழுத்தாளர் பவா செல்லத்துரை தனது சொந்தப் பதிப்பகமான வம்சி பதிப்பக விற்பனை நிலையத்துக்கு வந்து தனது வாசகர்களை சந்திக்க இருக்கிறார். அதேபோல ஞாயிற்றுக்கிழமை நடிகர் சிவக்குமாரும், திங்கட் கிழமை நடிகர் பார்த்திபனும். நடிகர் சத்தியராஜூம் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
Be the first to comment on "ஈரோடு புத்தகத் திருவிழா கொண்டாட்டங்களும்! முக்கியமான பதிப்பகங்களின் புதிய வெளியீடுகளும்!"