நேர்மை என்பது ஒருவகை நோய்! – எவனோ ஒருவன் ஒரு பார்வை!

Evano Oruvan Movie Review

இயக்குனர் நிஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், சங்கீதா மற்றும் சீமான் நடிப்பில் உருவான படம் எவனோ ஒருவன். மராத்தியில் வெளியான டோம்பிவிலி பாஸ்ட் என்ற படத்தின் தமிழ் ரீமேக்.

வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற நடுத்தர வர்க்க குடும்பஸ்தர். ஒரு பையன் ஒரு மகள் மனைவி என்று அளவான குடும்பத்துடன் வாழ்ந்து வரும் வாசுதேவன் நேர்மையான மனிதர். ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் என்பதை தீவிரமாகப் பின்பற்றுபவர்.

மகள் வர்சாவை தனியார் பள்ளியில் சேர்க்க முயல்கிறார். டொனேசன் கேட்டதால் அந்தப் பள்ளிக்கூடமே வேண்டாம் என்று அரசுப்பள்ளிக்கூட படிப்பே போதும் என்கிறார். மகனை டியூசன் அனுப்ப சொல்கிறார் மனைவி. பள்ளிக்கூடத்துல படிக்கிற வாத்தியார்கிட்டயே டியூசனா, டியூசன்ல சொல்லித்தரத ஸ்கூல்லயே சொல்லி தரதுதான என்று மனைவியிடம் வாதாடுகிறார். ஏன் யாருமே நேர்மையா இருக்க மாட்டிங்குறாங்க என்று வாசுதெவன் குமுற அந்த சமயத்தில் தண்ணீர் லாரிகாரன் தண்ணீர் விட லஞ்சம் கேட்கிறான். அதை தட்டிக்கேட்கிறார் வாசு. ஆபிசுக்குச் சென்றால் அங்கு மலையாள பணக்காரன் இருக்க வேண்டிய முக்கியமான டாக்குமெண்ட் இல்லாமல் லோன் வாங்க ஒத்துழைக்க சொல்கிறார். அது வாசுவுக்கு பிடிக்கவில்லை. குளிர்பான கடையில் நண்பருடன் குளிர்பானம் அருந்த கடைக்காரரோ இரண்டு ரூபாய் அதிகமாக கேட்கிறார். உடனே கிரிக்கெட் பேட்டை தூக்கி கடையை அடித்து நொறுக்குகிறார். தண்ணீ லாரிக்குச் சொந்தக்காரனான கவுன்சிலரோ தேவையில்லாத நீச்சல் குளத்தை துவக்கி வைக்க அவரை கத்தியால் வெட்டுகிறார் வாசு. கஞ்சா விற்பவனின் இடத்தை தேடிச்சென்று அங்குள்ள குடிசைகளை கொளுத்திவிட்டு அங்கிருந்து துப்பாக்கியோடு திரும்புகிறார்.

போலீஸ் அவரை தேட ஆரம்பிக்கிறது. நடுஇரவில் சாலையில் அமர்ந்து ஏன் யாருமே நேர்மையா இருக்க மாட்டிங்குறாங்க என்று புலம்புகிறார். அன்றுகாலை வாய்பேச முடியாத சாலையோர ஓவிய சிறுவனுக்கு ரத்த வாந்தி வருகிறது.

மருத்துவமனையிலோ டாக்டர் இல்லை பெட் இல்லை என்று ரிசப்னிஸ்ட்டும் செவிலியனும் ஒரு தாத்தாவை அதட்ட அங்கு நடந்த அநியாயத்தை டாக்டர் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டுகிறார். இது பத்திரிக்கைகளில் வெளியாக காவல் துறையினர் அவரை என்கவுன்டர் பண்ண முடிவு செய்கிறது. காவல் ஆய்வாளரான சீமான் அதற்குப் பொறுப்பேற்கிறார்.

வாசுதேவனின் நேர்மையான அறச்சீற்றத்தை சைக்கோ தனம், லூசுத்தனம், அரவேக்காடு என்று ஒருதரப்பு சொல்ல இன்னொரு தரப்போ சூப்பர்மேன் என்று பாராட்டுகிறது. வாசுதேவன் செஞ்ச தப்பு தப்ப தட்டிக் கேட்டதுதான்… நம்ம நாட்டுல குற்றவாளியவிட குற்றத்த தட்டிக் கேட்கறவன தான் கேவலமா பாக்குறோம் என்று புலம்புகிறார் சீமான். அவரே பின்னாளில் வாசுதேவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து துப்பாக்கியோடு செல்கிறார்.

வாசுவோ நான் என் குடும்பத்த மட்டும் பாத்துட்டு வந்துட்றேன் என் மகளுக்கு ஆஸ்துமா இருக்கு ப்ளீஸ் என்று கெஞ்ச காவல் ஆய்வாளரோ மறுக்கிறார்கள். உடனே வாசு தன்னிடம் உள்ள துப்பாக்கியை காட்டி மிரட்ட போலீசோ அவரை சுடுகிறது. வாசுவின் கையிலுள்ள தோட்டா இல்லாத துப்பாக்கி கீழே விழுகிறது!

தலைகுனிஞ்சே நடந்து பழக்கப்பட்ட நம்மள்ல இருந்து ஒருத்தன் தலைநிமிர்ந்தானா உடனே அவன தலைல தட்டி உட்கார வைக்குறோம்… அப்டியும் இல்லன்னா தரையோடு தரையா தலைய வச்சி தேய்ச்சிவிட்றோம் என்று காவல் ஆய்வாளர் சொல்ல படம் முடிகிறது.

ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ் படங்களில் சொல்லப்படும் விஷியங்கள் தான் இங்கு சொல்லப்பட்டிருக்கு என்றாலும் சொன்ன விதத்தில் வித்யாசமாக நின்று மனதை கவர்கிறது. நேர்மையாக இருப்பது ஒரு வகை நோயாகவே மாற்றிவிட்டது இந்த சமூகம் என்பதை உணர்த்தும் அட்டகாசமான படம்.

Related Articles

உனக்கு ராவணன் மாதிரி புருசன் கிடைப்பான்!... கடந்த சில வருடங்களாகவே வட சென்னை மக்களைப் பற்றி திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருவது குறிப்பிடத் தக்கது. அவற்றில் மெட்ராஸ், வட சென்னை, காக்கா முட்டை போ...
சுஜித்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்... நடிகர் விவேக் : கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எ...
உலக புத்தக தினம் – ஏப்ரல் 23... ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் என்று கொண்டாடப் படுகிறது. ஆனால் ஏப்ரல் 23ல் கொண்டாடுவதற்கான காரணம் என்ன என்று நம்மில் பாதி பேருக்கு...
பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! ̵... இந்தியாவின் உயர்சாதியினரை விட மிகமிக மேலான மனசாட்சியும் பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர். இது தான் இந்த நாவலின் மையக்கரு.எழுத்தாளர் ஜெயமோகனின...

Be the first to comment on "நேர்மை என்பது ஒருவகை நோய்! – எவனோ ஒருவன் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*