இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் ஊடாக இந்த மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைகளின் மூலம் பயணிகள் காடுகளை உயரத்தில் இருந்து பருந்து பார்வை பார்க்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். இந்தியாவில் முதல் முறையாக கெனொபி நடைமேற்கொள்ளும் வசதி கர்நாடக மாநிலத்தில் செய்யப்பட்டு இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்தச் சுற்றுலா வசதி செய்யப்பட்டு இருக்கிறது. கேஸ்டில் ராக் அருகேயுள்ள  உத்தர கன்னடாவின் குவேஷி பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த கெனொபி நடைமேடை. தரை தளத்திலிருந்து முப்பது அடி உயரமும், 240 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்திருக்கிறது இந்த மேடை.

கர்நாடக சுற்றுலா துறையும், கர்நாடக வன துறையும் இணைந்து இந்த திட்டப்பணியை உருவாக்கி இருக்கிறார்கள். பிப்ரவரி 18 ஆம் தேதி முதல்  பொது மக்களின் பயன்பாட்டுக்காக கெனொபி நடை மேடை திறக்கப்பட இருக்கிறது. இதன் திறப்பு விழா அன்று வனத்துறை அமைச்சர் ராமநாத ராய், தொழில் துறை அமைச்சர் ஆர். வி. தேஷ்பாண்டே சுற்றுலாத் துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆகியோர் வருகை தர இருக்கிறார்கள்.

‘இந்த கெனோபி நடை நாட்டிலேயே முதல் முறை இங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று காடுகளின் தலைமை பாதுகாப்பாளர் ஓ. பாலையா தெரிவித்தார். பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாயும், பதிமூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருபத்து ஐந்து ரூபாயும் கட்டணம் வசூலிக்க வனத்துறை முடிவு செய்திருப்பதாகவும், எனினும் ஆப்ரேட்டர்களை பொறுத்து கட்டண வேறுபாடு இருக்குமென்றும்  மேலும் அவர் தெரிவித்தார்.

தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் இந்த கெனோபி நடை உண்டு என்றாலும், நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சுற்றுலா வசதி பறவையியல் ஆய்வாளர்களுக்கும், பறவை விரும்பிகளுக்கும் ஒரு பேரனுபவமாக இருக்கக்கூடும்.

Related Articles

செக்ஸ் எஜூக்கேசன் இன் இந்தியா! – ம... இந்தியாவில் சில காலங்களுக்கு முன்பு பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே எதாவது ஒரு கொலைக் கார கிழவி கள்ளிப் பால் ஊத்தி சாகடிக்கும். அதை அடுத்து கருவை ஸ்கேன் ...
மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? &#... சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? ...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...
தமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட... தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகி...

Be the first to comment on "இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்"

Leave a comment

Your email address will not be published.


*