ரஜினி அஜித் ரசிகர்களுக்கிடையே போட்டியை உருவாக்கியவர் இவர் தான்! – இவருக்கு இதான் வேலையே!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் ” பேட்ட ” . அதே நாளில் சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகி வெளியாக இருக்கும் படம் ” விஸ்வாசம் “. இரண்டு படங்களின் டீசர்களும் ட்ரெய்லர்களும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. முதலில் வெளியான பேட்ட ட்ரெய்லரில் ” கொல காண்டுல இருக்கேன்… கொல்லாம வுட மாட்டேன்… ” , ” இந்த பொண்டாட்டி புள்ளன்னு செண்டிமெண்ட் பாக்குறவன்லாம் அப்படியே ஓடிப் போயிடு… ” என்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

அடுத்த சில நாளில் வெளியான விஸ்வாசம் படத்திலோ அந்த வசனங்களை எதிர்க்கும் வகையில்,

” உங்க மேல கொல கோவம் வரணும் சார்… ஆனா உங்கள எனக்குப் பிடிக்கும்… ”

the one who created the competition between Ajith and Rajini fans! - This is the job for him!

” தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார் பட்டி, பேரு தூக்கு துரை, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா… ஒத்தைக்கு ஒத்த வா டா… ” என்று வசனம் இடம் பெற்று உள்ளது. இதனால் தற்போது அஜீத் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே போட்டி உண்டாக விஜய் ரசிகர்களோ ஓரமாக உட்கார்ந்து நடக்கும் சண்டையை ஆர்வமாக வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

சிவனேன்னு இருந்த ரசிகர்களுக்கு இடையே இப்படி போட்டி உண்டாக யார் காரணம் தெரியுமா? வேறு யாரு அந்த இரண்டு படங்களின் ட்ரெய்லரை எடிட் செய்த எடிட்டர் தான். எடிட்டர் ரூபன் தான் இரண்டு படங்களுக்கும் எடிட்டர். இரண்டு படங்களின்

the one who created the competition between Ajith and Rajini fans! - This is the job for him!

ட்ரெய்லர்களையும் அவர் தான் எடிட் செய்துள்ளார். அடிச்சிக்கிட்டு சாகுங்கடா என்று வெட்டி சேர்த்து எடுத்திருப்பார் போல. வேலையை பார்த்துவிட்டார்! சினிமா வட்டாரத்துக்குள் அவரைப் பற்றித் தான் பேச்சு அடிபடுகிறது. எடிட்டிங் னா இப்படி இருக்கணும், ரசிகர்களை உண்மையிலயே பெரிய அளவுல டீஸ் பண்ணிருக்கு… நல்ல ஓப்பனிங் எதிர்பார்க்கலாம்… என்று பேச்சு அடிபடுகிறது.

அதே சமயம் பேட்ட படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என்கிறார்கள். ரூபனின் எடிட்டிங் ஷார்ப்பாக இருக்கும், இந்நேரம் நிறைய காட்சிகளை வெட்டி எடுத்திருப்பாரே… எடுக்காமல் எப்படி விட்டார்… என்றும், மூன்று மணி நேரமா இருந்தாலும் படம் சுவாரஸ்யமா இருக்குற மாதிரி எடிட் பண்ணிடுவார் என்றும் பேசப் படுகிறது.

Related Articles

அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி ப... தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் & ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்ரிலீஸ் : வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்எழுத்து இயக்கம் : கௌதம் வாசுதே...
சுஜாதா எழுதிய ” திரைக்கதை எழுதுவது... சுஜாதா வின் "திரைக்கதை எழுதுவது எப்படி ? " புத்தகத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன் சுஜாதா எழுதிய " சிறுகதை எழுதுவது எப்படி ? " என்ற புத்தகத்தைப் பற்றிப் ...
யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசியவிருது ... யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் கேள்விக்கான விடைதான் இன்றும் கிடை...
17 Years of துள்ளுவதோ இளமை... நடிகர் தனுஷ் அறிமுகமான படம். முதல் படமே A  சர்டிபிகேட் படம். ரிலீசாகி இன்றோடு ( மே 10, 2019 ) 17 வருடங்கள் ஆகிறது. இன்று தனுஷ் அடைந்திருக்கும் உயரமோ வ...

Be the first to comment on "ரஜினி அஜித் ரசிகர்களுக்கிடையே போட்டியை உருவாக்கியவர் இவர் தான்! – இவருக்கு இதான் வேலையே!"

Leave a comment

Your email address will not be published.


*