நான் சிம்பிளான ஆளு இல்ல – நடிகர் ரஜினிகாந்த்!

I am not a Simple man -Rajinikanth

சின்னத்திரை பக்கம் அவ்வளவு எளிதாக தலை காட்டாத நடிகர்கள் தான் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர். இதில் விஜய் அவ்வப்போது சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது உண்டு. அஜித் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. கமல் பிக்பாஸ் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். யார் கூப்பிட்டாலும் சளிக்காமல் சென்று பேட்டி கொடுத்தார். இப்போது ரஜினியும் இந்த வரிசையில் இணைந்து உள்ளார். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக அவருடைய 2.O சேட்டிலைட் ரைட்ஸ் வாங்கிய தொலைக்காட்சிக்குத் தான் அந்த பேட்டி. அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் சில பதில்களும் இங்கே…

கேள்வி: ரஜினிங்கற பிரம்மாண்டம், ஷங்கர்ங்கற பிரம்மாண்டம் சிவாஜில தொடங்கி எந்திரன் முடிச்சு இப்ப 2. O ல வந்து நிக்குது. எந்திரனோட ஸ்ப்ரிட்சுவல் சீக்வன்ஸ் தான் 2.O னு சொல்றாங்க. எந்திரன்ல இருந்து என்னலாம் 2.O க்கு வந்திருக்கு?

பதில்: கேரக்டர்ஸ் தான். வெறும் கேரக்டர்ஸ் மட்டும் தான். சிட்டி, வசீகரன், 2.O இவ்ளோ தான். மத்தபடி எந்திரனுக்கும் 2.O க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எந்திரன்ல சயின்டிஸ்ட் போரா, குட் சிட்டி, பேட் சிட்டி, வசீகரன்… இப்படி நாலு கேரக்டர்ஸ சுத்தி கதை நடக்கும். இது களமே வேற. அப்றம் சங்கர் இந்தப் படத்துல சொல்லிருக்குற மெசேஜ்க்காக உலகின் நம்பர் ஒன் டெக்னிசியன்லாம் டேட்ஸ் ஒதுக்கி சிரமம் எடுத்து வேல செஞ்சு தந்துருக்காங்க. அப்படினா பாத்துக்குங்க படம் எப்படி இருக்கும்னு…

கேள்வி: சங்கர், ரஜினி இப்படி இரண்டு பிரம்மாண்டங்கள் கூட ஏ.ஆர். ரகுமான் ங்கற இன்னொரு பிரம்மாண்டம் இணைஞ்சிருக்காங்க. இந்தப் படத்தோட இசைய பத்தி சொல்லுங்க…

பதில்: முதல்ல படத்துல பாட்டே வைக்க வேணாம்னு இருந்தோம். அப்றம் டைட்டில் சாங்னு ஒன்னு ரெடி ஆச்சு. ஒரு பாட்டு மட்டும் போதாது இன்னும் ரெண்டு பாட்டு சேர்த்தா தான் ஒரு கம்ப்ளீட் ஆல்பமா இருக்கும்னு ரகுமான் சொன்னார். அப்றம் டூயட் சாங் அப்படி இப்படினு மொத்தம் நாலு சாங் அதுவாவே அமைஞ்சிடுச்சு.

காட்சிகள இன்னும் வீரியமா காமிக்க கண்டிப்பா இசை தேவ. பிஜிஎம் க்காக ரகுமான் லண்டன், சென்னை னு மெனக்கெட்டு இசை அமைச்சிருக்காரு…

கேள்வி: உங்களுக்கும் இசைக்குமான தொடர்பு எப்படி? நீங்க தனிமைல இருக்கும்போது ரொம்ப ரசிச்சு கேட்குற இசை/ பாடல் எது?

பதில்: போனால் போகட்டும் போடா… பாடல் தான் சின்ன வயசுல இருந்து என்னுடைய பேவரைட் பாடல்…

தமிழ் தெரியாத காலத்துல அந்தப் பாட்டுல வர இசைய மட்டும் ரசிப்பேன்… அதுக்கப்புறம் நண்பர்ட்ட அந்தப் பாடலோட அர்த்தம் கேட்டு புரிஞ்சதும் ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு…

கேள்வி: சிவாஜி, எம்ஜிஆர்க்குலாம் அந்தக் காலத்துல இருந்த கட்அவுட்ஸ்ஸ பாத்து உங்களுக்கும் ஒரு ஆசை வந்திருக்கும்ல… அப்படி உங்களுக்கு முதல்முதல கட்அவுட் வச்சத பாத்தப்ப உங்களுக்கு எப்படி இருந்துச்சு… ?

பதில்: அந்தக் கனவு இருக்குற வரைக்கும் ரொம்ப உணர்ச்சிகரமா இருந்துச்சு. ஆனா முதல் கட்அவுட்ட பாத்ததும் பெருசா சந்தோசம் இல்ல. சரி ரைட்டு நமக்கும் கட்அவுட் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க அப்பிடினு சாதாரணமா தான் பாத்தேன்.

எப்பவுமே கனவுல இருக்குற சந்தோசம் நிஜத்துல நடக்குறப்ப இருக்காது. திருமணம் உட்பட எல்லாத்துலயும் இதுதான். மாயே தான்!

கேள்வி: மாயே ங்கறது புரிஞ்சனால தான் எல்லாத்தயும் சிம்பிளா எடுத்துக்குறாங்களா? உங்களுடைய சிம்ப்ளிசிட்டிக்கு இதுதான் காரணமா?

பதில்: சிம்ப்ளிட்டிங்கறது புரில… நான் சிம்ப்ளாவா இருக்கேன். நான் போறது பிஎம்டபள்யூ கார்ல, தங்கி இருக்குறது போயஸ் கார்டன்ல, சாப்டறது பைவ் ஸ்டார் செவன் ஸ்டார் ஹோட்டல்ல… சிம்பிளிசிட்டிங்கறது எனக்கு புரியல…

கேள்வி: ரஜினி எந்திரனுக்காக எவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்தது? மேக்கப் போட்றதுக்கே ஒருநாள் பக்கம் செலவாகும்னு சொல்றாங்க?

பதில்: எந்திரன்ல வசீகரன், குட்சிட்டி, பேட் சிட்டினு மூனு கதாபாத்திரம் இருந்துச்சு. வசீகரன் சாதாரண மனிதன் அதனால அந்தக் கதாபாத்திரம் கஷ்டமா இல்ல. சிட்டி பண்றப்ப தான் கொஞ்சம் கஷ்டம். உடல்மொழில மனித தன்மை வந்திடக்கூடாது அதே சமயம் ஓவர் மெக்கானிக்கலாவும் மாறிடக்கூடாது… எந்திரன்ல அது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு… அந்தப் படம் எனக்கும் சங்கருக்கும் புது அனுபவங்கறனால கஷ்டம் இருந்துச்சு…

2.O ல ரெண்டு பேருமே நல்ல அனுபவப்பட்டிருந்தோம்… சிட்டி கதாபாத்திரம் செய்றப்ப கொஞ்சம் சிரமம் இருந்துச்சு… மத்தபடி டெக்னிசியன்ஸ் படம் இது… என்னைக் காட்டிலும் அக்சய் குமார் தான் கஷ்டப்பட்டாரு…

கேள்வி: உங்களோட ஸ்டைல் பத்தி தெரியும்… சாதாரண மனுசன் கேரக்டர்ல உங்க ஸ்டைல் செட்டாகும்… சிட்டி கதாபாத்திரத்துக்குள்ள எப்படி உங்க ஸ்டைல பொருத்துனிங்க… ?

பதில்: இதுக்கு முழு கிரிடிட்ஸ்ஸும் சங்கருக்கு தான்… அவரு ஸ்கிரிப்ட் சொல்லும்போதே எப்படி எப்படினு நடிச்சுக் காமிச்சாரு… நான் அத ரெக்கார்ட் பண்ணிக்கலாமான்னு பாத்தேன்…

சங்கர் நல்ல நடிகர். நடிகராகணும் தான் வந்தாரு… எதோ எங்க நல்ல நேரம் நடிகர் ஆகல… இல்லனா எங்களலாம் எதிர்பாக்காம அவரே நடிச்சு அவரே டைரக்சன் பண்ணி தூள் கிளப்பிட்டு இருந்துருப்பாரு…

கேள்வி: உலகம் முழுக்க பல்வேறு ஜானர்ல படம் வருது… அதுல குறிப்பிட்ட நடிகர்கள் மறக்க முடியாதவங்க… ஆக்சன்னா ஜாக்கி சான், காமெடின்னா சார்லி சாப்ளின், டான்ஸ் அண்ட் மியூசிக்னா மைக்கேல் ஜாக்சன்… அந்த மாதிரி ஸ்டைல்னா நீங்க… இது எப்படி சார் கண்டுபிடிச்சிங்க… நம்மளோட ஸ்டைல தான் மக்கள் ரசிக்குறாங்கனு எப்ப உணர்ந்தீங்க…

பதில்: இல்ல… அது இப்ப வரைக்கும் புரியல… பாலச்சந்தர் சார் ஒருவாட்டி சொன்னாரு… உன்னுடைய ப்ளஸ்ஸே உன்னுடைய ஸ்பீடு தான்… சினிமாவுக்குள்ள நிதானமா பேசி நடிக்க சொல்வாங்க… ஆனா நீ உன்னுடைய ப்ளஸ் பாயிண்ட் எதுவோ அதவே மெயிண்டயின் பண்ணுனு சொன்னாரு… அவரு சொன்னத தான் இப்பவரைக்கும் பண்றேன்னு நினைக்குறேன்…

கேள்வி: ஹீரோயின் எமி ஜாக்சன் பத்தி சொல்லுங்க…

பதில்: அவிங்க நல்லா பண்ணிருக்காங்க… ரோபோ கேரக்டர் நல்லா பண்ணிருக்காங்க… அவுட்டோர் சீன்ஸ்லாம் நிறையா இருந்துச்சு… ஆக்சன் சீன்ஸ் உட்பட எதுக்கும் முகம் சுளிக்காம நடிச்சாங்க… லண்டன் நடிகை சென்னை வெயில்ல டைட்டான ட்ரெஸ் போட்டுக்கிட்டு நடிச்சிருக்காங்க… ஹாட்ஸ் ஆப் டு கெர்…

கேள்வி: நடிகர் அக்சய் குமார் பற்றி சொல்லுங்க…

பதில்: பொறுமையான டெடிகேட்டடானு நடிகர். படத்துல அவரு தான் ஹீரோ அவரு தான் வில்லன். பேச வேண்டிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு…

இன்னும் பல கேள்விகள் தொடர்கிறது. இருப்பினும் மக்களை வெகுவாக கவர்ந்த பதில் என்றால் நான் சிம்பிளான ஆளா என்று தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையை விவரித்த பதில் தான் தற்போது இணைய தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

Related Articles

தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொ... கடந்த இரண்டு நாட்களாகவே ஊடகங்களில் ரஜினி பற்றிய செய்திதான் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தூ...
சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிக... அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்) இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்...
ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வ... ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்ற...
கக்கனையும் காமராஜரையும் நாம தான் தேடி கண... " நான் எந்த கம்பெனியும் விலைக்கு வாங்கவும் வரல... அழிக்கவும் வரல... இன்னிக்கு என்ன நாள்... தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாள்... நா என்னோட ஓட்டுப் போட...

Be the first to comment on "நான் சிம்பிளான ஆளு இல்ல – நடிகர் ரஜினிகாந்த்!"

Leave a comment

Your email address will not be published.


*