கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் – ஐஐடி ஆய்வு மாணவி சாதனை

கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் - ஐஐடி ஆய்வு மாணவி சாதனை

ஐஐடி கரக்பூரில் உயிர் தொழில்நுட்ப துறையில்(Biotechnology) முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் மாணவி ரம்யா வீறுபோட்லா. இவர் கழிவு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களின் மூலம் இயங்கும் பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இந்த தயாரிப்பு, கழிவு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை செலுத்துவதன் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்ய தொடங்குகிறது.

‘பொதுவாக நுண்ணுயிர் எரிபொருள் செல்கள் (Microbial Fuel Cells(MFC)) சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள இரண்டு நாட்களாவது ஆகும். அதன் பிறகே அவை மின் உற்பத்தியைத் தொடங்கும். ஆனால் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவியில் பாக்டீரியாக்கள் செலுத்தப்பட்டு பத்து நொடிகளுக்குள் மின் உற்பத்தி தொடங்கும். அதாவது பாக்டீரியாக்கள் செலுத்தப்பட்ட உடனேயே’ என்கிறார் பேட்டரியை உருவாக்கிய ஆய்வு மாணவி  ரம்யா.

தற்போது இந்தக் கருவி சில மைக்ரோவாட்ஸ்(Microwatts) அளவுக்கு மின் உற்பத்தி செய்து வருகிறது. தொடர்ந்து இது போன்று சில கருவிகளை உருவாக்கும் பட்சத்தில் அவை நிறைய மின் உற்பத்தியைத் தரும். அதைக் கொண்டு நடைமுறை பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மற்ற பேட்டரிகள் போல கனமாக இல்லாமல், ரம்யா உருவாக்கி இருக்கும் இந்த பேட்டரி பேப்பர் தளத்தால்(Paper Platform) எடை குறைவான ஒன்றாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது காற்று எதிர்மின்வாயை(Air Cathode) மற்றும் நேர்மின்வாயை (Anode) போன்றவற்றால் செய்யப்பட்டு இருக்கிறது.

பத்து லட்சம் பரிசு

சமீபத்தில் தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கண்டுபிடிப்பு போட்டி (the annual National Design and Development Innovation Contest) ஐஐடி கரக்பூரில் நடைபெற்றது. டீம் எலெக்ட்ரோட்ஸ் (Team Electrodes) சார்பாகத் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்த ஆய்வு மாணவி ரம்யாவுக்கு முதல் பரிசும், பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

முதல் பரிசை வென்ற ரம்யா தனது உருவாக்கம் குறித்து பேசும் போது ‘ தற்போதைக்கு இந்தக் கருவியை கொண்டு வீட்டுச் சாதனங்களுக்கான மின் வழங்கலை ஏற்படுத்தித் தர இயலாது. இருப்பினும் மின்னணு பாகங்களுக்கான மின் வழங்கலை இந்தக் கருவி மூலம் செய்து தர முடியும்’ என்றார்.

ரம்யாவின் முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர் முனைவர் தேபப்ரதா தாஸ் ‘இந்தக் கண்டுபிடிப்பை உயிர்வாயு கழிப்பறைகளில் (Bio-electric toilets) பயன்படுத்தும் போது மிகப்பெரிய பலனை தரும்’ என்றார். மேலும் இந்தக் கருவி குறித்து அவர் பேசும் போது ‘இது நூறு சதவீதம் மக்கும் தன்மை கொண்டது, சுற்றுச்சூழலுக்கு இணக்கமானது. இந்தத் தன்மைகளை இரசாயன பேட்டரிகளில் நாம் எதிர்பார்க்க முடியாது’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கருவியை உருவாக்க இயந்திர பொறியியல்(Mechanical Engineering) , பொருள் அறிவியல் மற்றும் மின்னணு (Material Science and Electronics) மற்றும் மின் தொடர்பு பொறியியல் (Electrical Communication Engineering)’ ஆகிய துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது கூட்டு முயற்சியை நல்கியிருக்கிறார்கள்

Related Articles

நம் நாட்டில் நடைபெறும் மணமுறிவுகளின் எண்... சகிப்புத்தன்மை ஏன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்ற கேள்விகள் எழுந்து கொண்டே செல்கிறது. இப்படி மணமுறிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
முதலையை பிடித்த பிரதமர்! – கலாய்த்... மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பாரத பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்ட் 13) அந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. அந்த நிகழ்ச்சியில் ...
காலா டீசர் – நெருப்புடா என்றது கபா... மார்ச்1ம் தேதி காலை பதினொரு மணிக்கு காலா டீசர் ரிலீஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டது காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ். அதனைத்தொடர்ந்...

Be the first to comment on "கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் – ஐஐடி ஆய்வு மாணவி சாதனை"

Leave a comment

Your email address will not be published.


*