தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை செய்தவர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கீத் ஆர்தர்ட்டன். இந்தச் சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப்  யாதவ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முறியடித்தனர்.

இந்தத் தொடரில் தனது பதிமூன்றாவது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் முதன்முதலில் ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். அதன்பிறகு நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் சாஹலுக்கு அடுத்து ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். இந்தத் தொடரில் மட்டும் குல்தீப் யாதவ மொத்தம் பதினாறு விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆர்தர்ட்டனின் இந்தச் சாதனை 1998 – 99 சீசனில் நிகழ்த்தப்பட்டது.

நேற்றைய சாதனைக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் ஆர்தர்ட்டனுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இருந்தார். தென்னாப்பிரிக்காவில் 1993 – 94 சீசனில் நடந்த எட்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் பதினோரு விக்கெட்டுகள் வீழ்த்திருந்ததே அவரது சாதனையாக இருந்தது.

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானவை. இருப்பினும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கே சாதனைகள் நிகழ்த்துவது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!... ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டுமே அளவில்லை. ஆசை பேராசையாக மாறும்போது அன்பு வெறியாக மாறும்போது அங்கே அமைதி நிற்காமலே விலகிச் சென்றுவ...
நாட்டிலேயே சிறந்த திடக்கழிவு மேலாண்மையைக... ஸ்வெச் சர்வேக்சன் 2018 கணக்கெடுப்பின்படி, திடக்கழிவு  மேலாண்மை செய்வதில் ஹைதராபாத் இந்தியாவின் சிறந்த தலைநகரமாக விளங்குகிறது. தெலங்கானா மாநிலத்தின் பா...
ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் ஒரு பா... நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் :வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து, புதுச்சேரி தனி தொகுதி ஆகிய காரணங்களால் இரண்டு தொகுதிகளை விடுத்து மீதி 3...

Be the first to comment on "தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை"

Leave a comment

Your email address will not be published.


*