தெலுங்குக்கு எப்படி பாகுபலியோ கன்னட திரை உலகுக்கு கேஜிஎஃப் அப்படி! என்று ஏகப்பட்ட பில்டப் இந்தப் படத்துக்கு. பில்டப்புக்கு தகுந்தாற் போல படம் இருக்கிறதா?
பிறக்கும் போது வேணா ஏழையா பொறக்கலாம்… ஆனா சாகும் போது பணக்காரனா தான் சாகணும்… என்று அம்மா சொல்ல அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஊரில் எவனெல்லாம் பெரிய டானாக இருக்கிறானோ சரியாக அவனை அடித்து துவம்சம் பண்ணி பெரிய ரூட் தலை ஆகிறார்! அம்மா மதிப்புமிக்க பணக்காரனாக வேண்டும் என்று தானே விரும்பினார்? இவர் ஏன் மாஸ் ரவுடி ஆனார்?! இதெல்லாம் ஒரு புறம் இருக்க… படத்தின் ஆரம்பத்தில் இருந்தே பின்னணி இசை காதை கிழிக்கிறது.
எப்படியாவது இந்தப் படத்தை பாகுபலி ரேஞ்சுக்கு கொண்டு வந்திடணும் என்று படக்குழு தீயாக உழைத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் மாஸ்… மாஸ்… மாஸ்… என்று படத்தை ரஜினி, அஜித்தை வைத்து எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஓவர் பில்டப் என்றும் சொல்ல முடியாமல்… அடேங் கப்பா என்று கலாய்க்கவும் முடியாமல்… ப்பா என்று வியக்கவும் முடியாமல் ரசிகர்கள் ம்ம் அப்புறம் என்பது போலவே அமர்ந்திருந்தார்கள். அதே சமயம் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
கைதட்டல் வாங்கிய மாஸ் வசனங்கள் :
* ” வீரக்கல் – அந்தக் கல்லுல அவன செதுக்கிறாங்கன்னா அவன் எதோ சாதிச்சிருக்கணும்… ”
* ” ஒரு வார்த்தை எழுதறதுக்கு முன்னாடி 100 தடவ யோசிப்பாரு… ”
* ” அரசாங்கமே இதுல இண்ட்ரஸ்ட் காமிச்சு பேன் பண்ணுதுனு இதுல எதோ நிஜம் இருக்குனு அர்த்தம்… ”
* ” தங்க சுரங்கமும் பொறந்துச்சு அவனும் பொறந்தான்… ”
* ” பணம் இருந்தா எல்லாரும் நிம்மதியா வாழலாம்னு நினைக்குறாங்க… ஆனா பணம் இல்லன்னா நிம்மதியா சாக கூட முடியாதுன்னு நினைக்குறது இல்ல… ”
* ” அம்மா லட்சியத்த மட்டுமே சொன்னா… ஆனா அத அடையற வழிய அவன் தான் தீர்மானிச்சான்… ”
* ” சில்ற காசுக்கு கை ஏந்தனும்… நிறைய காசுக்கு கை ஓந்தனும்… ”
* ” பவர்புல் பீப்புள் கம் ஃப்ரம் பவர்புல் ப்ளேசஸ்… ”
* “அவன் பாதம் சிறுசு இருந்தாலும் ஆனா தேர்ந்து எடுத்த பாதை பெருசு… ”
* ” நான் பொடியன் இல்ல… என் பேரு ராக்கி… மண்டைல ஏறுச்சா என்று மண்டைல பாட்டில அடிக்கும் காட்சி… ”
* ” யாரையாவது அடிச்சா போலீஸ் தேடி வருவாங்க… ஆனா போலீசவே அடிச்சா உங்கள மாதிரி டானுங்க தேடி வருவாங்க… ”
* ” என்னடா வேணும் உனக்கு… ? ”
” இந்த உலகம்… ”
* ” ரத்த வாடைக்கு சுறா மீனுங்க ஒன்னு கூடும்… ஆனா அந்த சுறாமீனுங்களுக்கு தெரியாது அது திமிங்கலம் போட்ட மாஸ்டர் பிளான்னு… ”
* ” நெருப்புல தூக்கி எரிஞ்சிங்க… ஆனா உங்களுக்குத் தெரியல நெருப்புல விழுந்தது இரும்புனு… அடிச்சு அடிச்சு இன்னிக்கு கத்தியாகி நிக்குது… ”
* ” யாரோ பத்து பேர அடிச்ச டான் ஆகல… நான் அடிச்ச பத்து பேருமே டானுங்க தான்… ”
* ” ஆழம் தெரியாம ஆழ முடியாது… ”
* ” ரொம்ப ரிஸ்க் எடுத்து செய்யணும்… செய்யலனாலும் ரொம்ப ரிஸ்க் தான்… ”
* ” எனக்கு ஓடிப்பழக்கம் இல்ல… ஓட ஓட அடிச்சு தான் பழக்கம்… ”
* ” எவ்வளவோ கில்லாடியா பாத்துருக்கேன்… ஆனா இப்பத் தான் கில் லேடிய பாக்குறேன்… ”
* ” இப்ப தான் உன்ன நினைச்சு பாத்ரூம்ல… குளிச்சிட்டு இருந்தேன்… ”
* ” சுயநலத்துகாக ஓடிட்டு இருக்குற இந்த உலகத்துல நமக்காக எவனும் நிக்க மாட்டான்… நாம தான் தடுத்து நிறுத்தனும்… ”
* ” எட்டு ஷூக்கு பாலிஷ் போட்டா தான் எனக்கு ஒரு பன்… தட்டுநிறைய சோறு வச்சிட்டு கீழ சிந்திட்டே சாப்டறவங்க மத்தில மண்ணுல விழுந்த பண்ண சாப்ட்ற… உலகுத்துல தாய மிஞ்சுன சக்தி எதுவும் இல்ல… ”
* ” சட்டத்தோட விரலுக்கு மோதிரம் போட்ருக்கேன்… அது ஷேக் ஹேண்ட்டும் கொடுக்கும்… சலாமும் வைக்கும்… ”
* ” ஊர்சுத்தி பாக்க வந்தவன் ஊர பத்தி தெரிஞ்சுக்குவான்… ”
* ” ஊரயே ஆள வந்தவனப் பத்தி ஊரே தெரிஞ்சுக்கும்… ”
* ” தல இல்லாத முண்டங்கிட்ட பேசறத விட தலகிட்டயே பேசலாம்னு வந்துட்டேன்… ”
* ” காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையவிட பயங்கரமா இருக்கும்… ”
* ” யுத்தத்துல யாரு மொதல்ல அடிக்குறாங்கறது கணக்கு இல்ல… யாரு மொதல்ல விழுறாங்ககறது தான் கணக்கு… ”
* ” ராக்கி நெருப்பு… எதிரிங்க பெட்ரோல்… எதிரிங்க அதிகமானா அவன் அதிகமா எரிப்பான்… தக தக தகன்னு… ”
* ” மனசுங்க மிருகங்கள கூண்டுல போட்ருப்பாங்க…
ஆனா இங்க மிருகங்க மனசுங்கள கூண்டுக்குள போட்ருக்கு… ”
சக்தி இல்லைன்னு தெரிஞ்சா அவீவளவு தான்…
* ” நான் இருக்கற வரைக்கும் என் கைய புடிச்சு நடக்க கத்துக்கு… நான் போனதுக்கு அப்புறம் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கைய கத்துக்கு… ”
* ” கேங்க கூட்டிக்கிட்டு வர்றவன் கேங்ஸ்டர்… ஒத்தையா வர்றவன் பிளாஸ்டர்… ”
* ” வாழ்க்கைனா பயம் இருக்கணும்… அது நெஞ்சுக்குள்ள மட்டும் இருக்கணும்… ஆனா அந்த நெஞ்சு நமக்கு எதிர்ல இருக்குறவனோட நெஞ்சா இருக்கணும்… ”
* ” கைல மீன வச்சுக்கிட்டு முதலய பிடிக்க போயிட்டிங்க… ஆனா முதலைக்கு மீன விட கை தான் பிடிக்கும்… ”
* ” ஆத்திரத்துல சரித்திரத்த உருவாக்க முடியாது… ”
* ” அவரசப்பட்டு சரித்திரத்த உருவாக்க முடியாது… அதேபோல சரித்திரத்த பிளான் பண்ணி புளூ பிரிண்ட் போட்டும் உருவாக்க முடியாது… ”
* ” கும்பலாவா போன தனியா போ… ”
குருவி, அலெக்ஸ்பாண்டியன், பில்லா 2, ஆயிரத்தில் ஒருவன், சதுரங்க வேட்டை, பரதேசி என்று பல படங்களை இந்தப் படம் நினைவூட்டுகிறது.
20000 அடிமைகள 400 காட்ஸ் சமாளிக்கணும்… அதனால விதிமுறைகள் ரொம்ப கடுமையா இருந்துச்சு… அப்பாவி மக்களின் சின்ன வெள்ளைக் கோடு… இது குறித்த காட்சிகள் இடம்பெறும் இடங்களில் பிரம்மாண்டம் தெரிகிறது. மற்ற படி கொஞ்சம் ஓவர் பில்டப் தான். இருந்தாலும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இந்தப் படத்தின் மேக்கிங் அமைந்தமைக்காக இந்தப் படத்தை கண்டிப்பாக தியேட்டரில் கண்டு ரசிக்கலாம்.
Be the first to comment on "இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு – காதை கிழித்த கேஜிஎஃப்!"