கமல்ஹாசனை காலி செய்யணும்! – வைகோ, விஜயகாந்த்க்கு நடப்பது தான் கமலுக்கும் நடக்கிறதா?

kamal

கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினியின் அரசியல் அறிவிப்பு முதல் தொடங்கியது இந்த ஆண்டிற்கான பரபரப்பு பையர். அன்று முதல் இம்மியளவும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கமல், ” கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கக்கூடாது. தியானம் செய்வது அவர் கடமை. எழுந்து நிற்பது என் கடமை ” என்று அந்தக்கேள்விக்கு பதிலளித்தார். அவருடைய இந்த பதில் வழக்கம் போல பலருக்கு புரியவில்லை. இவர் தப்புனு சொல்றாரா? சரின்னு சொல்றாரா? தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காதவருக்கு முட்டுக்குடுக்கிறாரா? அவர்களின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறாரா? என்று தெரியாமல் சிலர் குழம்பி நிற்க, ஒரு சிலரோ ” டேய், இந்த கமல் மறுபடியும் எதோ புரியாத மாதிரி சொல்லிருக்கான்டா… வா அந்தாள வச்சு செய்வோம் ” என்ற கணக்கில் சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கக்கூடாது என்கிறீர்கள் அப்புறம் எதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்தப் பாடலை ஒலிக்க வைத்து வியாபாரம் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

கமல் என்ன பொருளில் சொன்னார்?

கமல் டிவிட்டுக்கு உரை எழுதும் சிலர்,

விஜயேந்திரர் பிரச்சினை குறித்து கமலிடம் கேள்வி எழுப்பப்படும்போது உண்மையில் அவருக்கு அந்த விவகாரம் தெரியவில்லை. கேட்ட கேள்விக்கு, பிற மொழிகளை மதிக்கத்தெரியாதவர் இருக்கும் இடங்களில் எதற்கு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை ஒலிக்கச் செய்தீர்கள், ஒலிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து எனத்தெரிந்தும் எழுந்து நிற்காமல் தியானம் செய்வது அவர் கடமை என்றால் என் தாய்மொழி வாழ்த்து ஒலிக்கும்போது எழுந்து நிற்பது என் கடமை. அவர்கள் அப்படித்தான், நான் இப்படித்தான் என்ற பொருளில் கூறியிருக்கிறார். ஆளுநர் கலந்துகொள்ளும் விழா, தமிழ் சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழா எப்படி கண்ட இடமாகும் என்ற கேள்விக்கும், அமைச்சர்கள் எழுதி கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்கும் ஆளுநர் இருக்கும் இடத்தை கண்ட இடமாக, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழாமல் இருந்த விஜயேந்திரரை எழுந்திரிக்க அறிவுறுத்தாத தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவை அவர் கண்ட இடம் என்று கூறவில்லை. அவர் இந்த பதிலை கூறும்போது தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரம் அறிந்திருக்கவில்லை. அவர் கொடுத்த பேட்டியின் வீடியோவை பார்த்தால் இது நன்கு புரியும். அவருக்கு நிலவரத்தை தெளிவாக புரிய வைத்ததே பத்திரிக்கை நிரூபர் தான்.

ஆக கமலை விமர்சிப்பது வெட்டி வேலை. காலையில் இட்லி சாப்பிட்டேன் நல்லா இருந்துச்சு என்று கமல் சொன்னால் இட்லி சாப்பிடுபவர்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கமல் சொன்னதாக திரித்துவிடுகிறார்கள். எப்படி வைகோவும், விஜயகாந்தும் எந்த கருத்து தெரிவித்தாலும் அதை காமெடியாக்கி நல்ல தலைவர்களை இழந்துகொண்டிருக்கிறார்களோ அதே தவறை தான் கமல் விசியத்திலும் செய்கிறார்கள். கமலை முதலில் காலி செய்ய வேண்டும், கேள்வி கேட்க ஆளில்லாமல் போக வேண்டும் என்பதே எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நோக்கம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்... இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2018ம் ஆண்டின் இறுதியில் வெளியான படம் அடங்க மறு. ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆனதால் ...
“மக்களே”, “ஒரு வேல இரு... யூடியூப் என்ற விஷயம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஆட்களுக்குத் தெரிய வருகிறது. இந்தியா கிளிட்ஸ், பிகைன்ட்வுட்ஸ் போன்ற சினிமா செய்தி கம்பெனிகள் கொஞ்சம் ...
வைரலாகும் அஜீத்தின் “அடேங் கப்பா&#... அஜீத் படத்தின் டீசர் ட்ரெய்லர் வைரல் ஆவதும், டீசர் ட்ரெய்லரின் வடிவேலு வெர்சன்கள் வருவதும் மிகச் சாதாரண விசியம். இணைய உலகையே அதிர வைக்க கூடியதாக இருக்...
யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு ஜூலை 15 ... யுவன் சங்கர் ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசை இயக்குனர். இருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்க...

Be the first to comment on "கமல்ஹாசனை காலி செய்யணும்! – வைகோ, விஜயகாந்த்க்கு நடப்பது தான் கமலுக்கும் நடக்கிறதா?"

Leave a comment

Your email address will not be published.


*