ஏப்ரல் 4ம் தேதி :
- குப்பத்து ராஜா
ஜிவி பிரகாஷ் குமார், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் “குப்பத்து ராஜா” திரைப்படம். நடன இயக்குனர் பாஸ்கர் இயக்கி இருக்கும் முதல் திரைப்படம்.
- நட்பே துணை
ஹிப்ஹாப் தமிழா, மற்றும் கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கும் கரு பழனியப்பன் இந்தப் படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
- உறியடி 2
போதுமான தியேட்டர் கிடைக்காமல் பல இக்கட்டான சூழல்களை கடந்து ரிலீசாகி மக்கள் மனதை கவர்ந்த படம் உறியடி. மூன்று வருடங்கள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
மேலும் ஏப்ரல் 4ம் தேதி ஒரு கதை சொல்லட்டுமா என்ற சிறுபட்ஜட் படமும் ரிலீசாக உள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி :
- கீ
நடிகர் ஜீவா படிப்பில் உருவாகியுள்ள படம். இரும்புத்திரை படத்தின் சாயல் என்று சொல்லப்படுகிறது.
- வாட்ச் மேன்
ஏஎல் விஜய்க்கு எப்படித்தான் கதையும் தயாரிப்பாளர்களும் கிடைக்கிறார்களோ என்று பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர். ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் யோகி பாபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம். நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- தேவராட்டம்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம். என்னென்ன சர்ச்சைகள் உண்டாகப் போகிறதோ தெரியவில்லை.
ஏப்ரல் 19ம் தேதி :
- காஞ்சனா 3
பேய் படங்கள் தொடர்ந்து ரிலீசாகி கொண்டிருந்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதால் இந்தப் படத்திற்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- அலாவுதீனின் அற்புத கேமரா
மூடர் கூடம் இயக்குனர் பல வருடங்கள் கழித்து உருவாக்கியுள்ள படம். அடுத்த படம் எப்போ? என்ற கேள்வியை ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் ஏப்ரல் 19ம் தேதி அவர்களுக்கு விடை கிடைக்கப் போகிறது.
- வெள்ளைப் பூக்கள்
நடிகர் விவேக் நாயகனாக நடித்துள்ள படம். இதை அடுத்து நீயா 2 இன்னபிற படங்கள் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளன.
Be the first to comment on "ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்!"