தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்

MP villagers deprived of water for 3 years, walk 5 km to get it

மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது.

3000 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் பெரும்பாலனோர் பண்ணை தொழிலாளர்களாகவும், சிறு வணிகர்களாகவும் இருக்கிறார்கள். தினமும் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு நடந்து சென்று அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் எடுத்து வரும் அவலச் சூழல் அந்தக் கிராமத்தில் நிலவி வருகிறது.

அந்தக் கிராமத்திற்குத் தண்ணீர் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

‘உத்திர பிரதேசத்து எல்லை வரை சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. எங்கள் குழந்தைகள் இதனால் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதே இல்லை.தினமும் அவர்கள் எங்களுடனேயே தண்ணீர் எடுக்க வந்து விடுகிறார்கள். காடுகளுக்கு இடையே நடந்து சென்று பெண்கள் தினமும் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.’ என்று கிராம வாசிகள் தெரிவித்தனர்.

கிராம மக்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

‘மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிராகரித்து வருகிறார்கள்’ என்று கிராம வாசிகள் மேலும் தெரிவித்தனர்.

தண்ணீர் பிரச்சனை மட்டுமல்லாமல் சாலை, மின்சாரம் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் கூடக் கிராம வாசிகள் அவதியுறும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்.

Related Articles

Vikatan Awards – Zee Awards –... Zee Cine Awards Tamil 2020Best actor - Dhanush (Asuran) Favourite actor - Vijay (Bigil) Sridevi inspiring woman of indian cinema award - N...
அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசன... கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரி...
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதராபாத் ...
பேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கு... திடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்களை மண்டை காய வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல்...

Be the first to comment on "தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்"

Leave a comment

Your email address will not be published.


*