நம் அனைவருக்கும் பிடித்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்தநாள்(ஜூலை12)!

Na Muthukumar

“ஆனந்த யாழை… மீட்டுகிறாயடி… நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… ” என்ற தங்கமீன்கள் படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலையும், ” தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தந்தை அன்பின் முன்னே…” என்ற கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம் பெற்றிருந்த பாடலையும்  எங்கு எப்போது கேட்டாலும் அனைவருடைய கண்களிலும் தானாக கண்ணீர் குளம்பி நிற்கும். அல்லது  உதடுகள் தானாக முணுமுணுக்க தொடங்கும்.

அப்படி நம் மனதை அழகு தமிழ் நிறைந்த பாடல் வரிகள் மூலம் கொள்ளை அடித்த நா. முத்துக்குமார் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பது மனதை கனமாக்குகிறது.

குறுகிய காலத்தில் இரண்டு தேசிய விருதுகள் வென்றவர். தேசிய விருதுகளை மட்டுமா வென்றிருக்கிறார். அவர் இல்லாத போதும் அவருக்காக பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் எத்தனை உள்ளங்கள் அவருக்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி அவர் எழுதிய வரிகளில் தங்களுக்கு பிடித்தது என்று இன்றும் மகிழ்ந்து வருகிறார்கள். ஆக அவர்கள் நா.முத்துக்குமார் இறந்துவிட்டதாக எண்ணுவது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

பாடல்கள் மூலம் அவர் நம்முடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டே தான் இருக்கிறார். அப் பெருமகனுக்கு இன்று பிறந்த நாள் என்பதில் எல்லோரும் மகிழ்வோம்.

குறிப்பு: அப்பா தன்னுடைய மகனுக்கு அல்லது மகளுக்கு எழுதிய கடிதங்கள் மிக உணர்வுப் பூர்வமானதாக இருக்கும். அப்படி இந்தாய அளவில் இரண்டு அப்பாக்களின் கடிதங்கள் மிக முக்கியமானவை.

ஒன்று, ஜவர்ஹலால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள். மற்றொன்று நா. முத்துக்குமார் தன் மகன் ஆதவனுக்கு எழுதிய இறுதி கடிதம். முடிந்தால் நா. முத்துக்குமார் அவர்கள் உயிர் போகும் தருவாயில் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தை நீங்களும் ஃப்ரேம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ( நெட்டில் கிடைக்கும்). தினமும் அந்தக் கடிதத்தை ஒரு முறை ஆவது படியுங்கள். நிச்சயம் நீங்கள் வாழ்வில் பெரிய வெற்றி பெறுவீர்கள்.

Related Articles

கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களு... ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் பதினைந்து வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்கு...
ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன... சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆ...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! ... காதலா காதலாஇயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)கதை: ஒரு பொய் பல...
பெரியார் பற்றிய 20 தகவல்கள்!... ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். பெற்றோர் வெங்கட்ட நாயக்கர் - சின்னத் தாயம்மாள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. இவர...

Be the first to comment on "நம் அனைவருக்கும் பிடித்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்தநாள்(ஜூலை12)!"

Leave a comment

Your email address will not be published.


*