சேத் ரான்ஸ், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக இரண்டு ஒன்டே மேட்சுகள் மற்றும் நான்கு டி20 மேட்சுகள் விளையாடி வருபவர். இவர் நடக்க இருந்த பெரிய தீ விபத்தை ஒரு தீயணைக்கும் வீரர் என்ற முறையில் தடுத்து நிறுத்தியுள்ளார். சேத் ரான்ஸ் கிரிக்கெட் வீரர் மட்டுமன்றி கிரேடவுண் பகுதி தீயணைப்பு படைபிரிவில் தீயணைப்பு வீரராகவும் பணிபுரிந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்று, நியூசிலாந்து கிரேடவுணில் உள்ள வொய்ட் ஸ்வான் பப்பில் நடக்க இருந்த பெரிய தீ விபத்தை எட்டு தீயணைப்பு இயந்திரங்களின் மூலமாக தீ எங்கிருந்து உருவானது என்பதையும் அது அந்த கட்டிடத்தின் தென் கிழக்கு மூலையில் உருவானது என்பதையும் தெரிந்து மற்ற இடங்களுக்கு பரவும் முன்னே தடுத்து நிறுத்தியுள்ளார்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களில் அவர் தனித்து தெரிவதற்கு இன்னொரு காரணம் அவர் நியூசிலாந்து கிரிக்கெட் பவுலர் என்பதே. அணிக்காக இரண்டு ஓன்டே மேட்சுகள் மற்றும் நான்கு டி20 மேட்சுகள் விளையாடியுள்ளார்.
சென்ற வருடம் மே மாதத்திலிருந்து தான், அவருடைய உலக அளவிலான கிரிக்கெட் பயணம் தொடங்கியிருக்கிறது. கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு இன்னும் பெரிய புகழை பெற்று தராவிட்டாலும் அவருக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அவரது தனித்திறமையை நிரூபிக்க முயலும் அவரது நல்ல மனிதநேய மாண்பை காட்டுகிறது. இதேபோல் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளில் இருப்பவர்கள் சிலர் மற்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் போலீஸ் பணி செய்தவர்.
தீயணைப்பு பணி முடிந்த பிறகு சேத் ரான்ஸ் தரப்பு நிரூபர்களிடம், கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் தான் தீ உருவாகியிருக்க வேண்டும். அங்கு சில பராமரிப்பு குறைபாடுகள் இருக்கிறது. நல்லவிதமாக சரியான நேரத்திற்கு அழைப்பு வந்ததால் தீ விபத்து நடக்க நேரிடாமல் முன்கூட்டியே தடுக்க முடிந்தது என்றனர்.
Be the first to comment on "கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும் தீயணைப்பு வீரர் என்பதே கவுரவம்: சேத் ரான்ஸ்"