நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! – 2.O விமர்சனம்!

Goosebump for every second - 2.0 Review!

செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிகிறதா? இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே… இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிருக்காங்களே… என்ன ஆகுமோ? இயக்குனர் ஷங்கருக்கு ஓய்வுக்காலம் வந்துவிட்டதோ? சுஜாதா இல்லாமல் ஷங்கர் என்ன செய்து வைத்திருக்கிறாரோ? என்ற பல கேள்விகளுடன் தியேட்டருக்குள் குவிந்திருந்தனர் ரசிகர்கள்.

படம் தொடங்கிய முதல் பத்து நிமிடங்கள் மிகச் சாதாரணமாக தொடங்கிய படம் பிரம்மிப்பு… பிரமிப்பு… பிரமிப்பு… இந்த உணர்வை படம் இறுதி வரை தக்க வைத்தது. சாலை முழுக்க செல்போன் பரவும் காட்சியிலும், காடுகளில் உள்ள மரங்களில் செல்போன் பரவும் காட்சியிலும் குட் சிட்டி மற்றும் பேட் சிட்டி அறிமுகமாகும் காட்சிகளில் எல்லாம் மெய் சிலிர்த்து விடுகிறது.

இடைவேளையில் அறிமுகமாகிறார் அக்சய் குமார். செல்போன்களுக்கு சிறகு முளைத்தால் எப்படி இருக்கும்? என்பதை மிரட்டலான சிட்டுக்குருவிகளின் கீச்சல் சத்தம் தோன்ற திரையில் மிரட்டுகிறார். இவர் தன் பிளாஸ்பேக் சொல்லும் காட்சி எதோ விளம்பர படம் போல இருக்க, அடுத்த சில காட்சிகள் அயற்சியைத் தந்தது. என்னடா இது படம் போச்சா என்று எண்ணுகையில் மீண்டும் வேகம் ஆரம்பிக்கிறது. ரெட் சிப் மாட்டிய சிட்டி, 3.O என்று ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் சடசடவென்று படம் வேகம் எடுக்கிறது.

அமெரிக்காவில் நம்மைவிட குறைவான செல்போன் நெட்வொர்க்களே இயங்கி வருகிறது? நம்மைவிட மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் மூன்றே மூன்று செல்போன் நெட்வொர்க்குகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் தான் பத்துக்கும் மேற்பட்ட நெட்வொர்க்குள் இயங்கி வருகிறது… செல்போன் உபயோகத்திற்கு என்று ஒரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும், இறந்த பின் ஒருவரை சுற்றி இருக்கும் ஆரோ பவரைப் பற்றியும் பேசுகிறார். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. செடிகளை நாசம் செய்யும் புழுபூச்சிகளை கொன்று திங்கும் பறவைகள் இல்லாவிட்டால் மனிதர்களுக்கு உணவே இல்லாமல் போய்விடும். ஆக பறவைகளுக்கும் நாம் வாழ்வளிக்க வேண்டும் என்ற கருத்தை கூறி இறுதியில் தன் ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். அவ்வப்போது சில ஷாட்கள் அந்நியன் படத்தை நினைவூட்டியது.

வசீகரனாக… குட் சிட்டியாக… ரெட் சிட்டியாக… 3.O வாக பல பரிணாமங்களில் ரஜினி கலக்கி உள்ளார். குறிப்பாக அக்சய் குமாராக உருவம் மாறிமாறி வரும் காட்சியில் ரஜினி நடிப்பு அருமை.

வட போச்சே… நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்லை… காதலுக்கு மரியாதை… என்று கொஞ்சமாக சிரிக்க வைக்க அவ்வப்போது எடுபிடி வேலைக்காக இறுதியில் ஒரு ரொமான்ஸ் பாடலுக்காக மட்டுமே எமி ஜாக்சன் நிலாவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.  

வைப்ரேட்டிங் மோட் பிஜிஎம்மை வில்லனுக்கும் எந்திரன் பிஜிஎம்மை சிட்டிக்கும் போட்டு இசையால் நம்மை கட்டிப்போட்டிருக்கிறார் ஏ. ஆர். ரகுமான். ராஜாளி நீ காலி பாடல் இடம்பெறும் காட்சியில் ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறார்.

” மனிதர்களுக்குப் பிடித்த 4 விஷியங்கள்: சினிமா, விளையாட்டு, சாப்பாடு, வதந்தி… “

“கடவுளும் அரசாங்கமும் ஒன்னு இருக்குற மாதிரியும் தெரியும்… இல்லாத மாதிரியும் தெரியும்… ” ” பெருசா ஒன்னு நடந்திருச்சுன்னா உடனே கடவுள் மேல பழி போடுறோம்… இல்லைன்னா தீவிரவாதி மேல பழி போடுறோம்… “

” நம்பர் ஒன் நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு… ஐயம் த ஒன்லி ஒன்… சூப்பர் ஒன்… “போன்ற  வசனங்களில் ஜெயமோகன் பளிச்சிடுகிறார்.

அடிப்படை கதை சற்று பலவீனமாக இருந்தாலும் அசறடிக்கும் திரைக்கதையும் கிராபிக்ஸ் காட்சிகளும் வியப்பை தருகின்றன. அடிக்கடி அயல்மொழிப்படங்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு சில காட்சிகள் சலிப்பைத் தரலாம். ஒரு சில காட்சிகளில் தன்னை விமர்சிக்கும் நபர்களை அப்டி ஓரமா போய் உக்காருங்க என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். 3Dயில் பார்க்கத் தவறாதீர்கள்!

Related Articles

பந்தி பரிமாறுவார்கள் எவ்வளவு முக்கியமானவ... ஆரம்ப காலங்களில் விசேஷ வீடுகளில் பந்தி என்பது தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல் இருக்கும். அப்போதெல்லாம் மண்தரையில் சாணி மொளங்கில் அமர்ந்து சாப்பிடுவத...
#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – ப... சிறுவன் ஒருவன் தெருவில் சண்டை போட்டு ஜெயிப்பதை பார்த்த சர்கார் என்பவர் அவனை தன்னுடன் வைத்து வளர்த்து குஸ்தி கத்துக் கொடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்ட...
உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்ட... ஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்ப...

Be the first to comment on "நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! – 2.O விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*