வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் வழங்கக் கூடாது என்று தொடக்க கல்வித்துறை ஆய்வாளர் அறிக்கை விடுத்து உள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி ஆய்வாளர்களுக்கும் தொடக்க கல்வித்துறை முதன்மை அதிகாரி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பது:
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணி தலைவர் ரெங்க ராஜன் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும் எனவும் ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து பழைய ஊதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி 23 ம் தேதி முதல் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் படும் என்று தெரிவித்து இருந்தார்.
போராட்டம் என்ற பெயரில் பணிக்குச் செல்லாமல் இருப்பவர்கள் மீது அத்து மீறல் தமிழ்நாடு குடிமைப்பணி விதியின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களும் அவர்களுக்கு நோ வொர்க் நோ பே என்ற முறையில் சம்பளம் பட்டுவாடா செய்யக் கூடாது என்றும் அப்படி செய்தால் அதுக்கு முழு ப்பொறுப்பும் மாவட்ட கல்வி அலுவலர்களே எடுக்க வேண்டும் எனவும் திட்ட வட்டமாகத் தெரிவித்து உள்ளனர்.
Be the first to comment on "போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி நோ வொர்க் நோ பே என்ற முறைப்படி சம்பளம் வழங்கப்பட மாட்டாது!"