மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை குடைந்து 15 கி.மீ சாலை அமைத்த ஜலந்தர் நாயக்! – ரியல் ஹீரோ!

mountainman

எது அடிப்படை தேவையோ அதை மட்டும் செய்து தராது இந்திய அரசு. தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி கால விரயமும் பணவிரயமும் செய்து பழக்கப்பட்டதாலோ என்னவோ ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், அமரர் ஊர்தி வசதி இல்லாததால் தாயின் சடலத்தை மகன் சுடுகாடு வரை தோளில் தூக்கி சுமந்த செய்தியையும், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்ற நவீன வசதி இல்லை என்ற செய்தியையும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் காணாமல் போய் பத்து நாட்களுக்கு மேலாகியும் கண்டுபிடிக்கவில்லை போன்ற செய்தியையும் படிக்க நேரிடுகிறது. இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது நடிகர் விஜய், ” வல்லரசு ஆவுறது எல்லாம் இருக்கட்டும்… முதல்ல நல்ல அரசு நடத்த பாருங்க… ” என்று ஒரு விருது விழாவில் கூறியதும், அறம் படமும் தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

யார் இந்த ஜலந்தர் நாயக்?

கும்சகி எனும் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தர் நாயக். ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ளது இந்த கிராமம். இந்த மலைக்கிராமத்தில் அடிப்படை தேவையான சாலை வசதிகூட இல்லை. இங்குள்ள மக்கள் அவசரமாக டவுனில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலோ, பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றாலோ அந்த கிராமத்தில் உள்ள மலையைக் கடந்துதான் சென்றாக வேண்டும். இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலோ என்னவோ, இந்தக் கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலோ என்னவோ இந்த கிராமத்திற்கு சாலை அமைக்கப்பெறவில்லை. இந்த நிலையை மாற்ற விரும்பிய ஜலந்தருக்கு மூன்று ஆண்பிள்ளைகள். தன்னுடைய பிள்ளைகள் கல்வி பெறுவதற்கு இந்த மலை தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இரண்டு ஆண்டுகளாக தனிஒருமனிதனாக போராடி பதினைந்து கிலோமீட்டருக்கு மலையை குடைந்து பாதை அமைத்துள்ளார்.,இந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய கிராமத்து மக்களுக்கு இது புரியாத செயலாகவே இருந்துள்ளது. ஜனவரி9ம் தேதி அன்று கந்தமால் மாவட்ட ஆட்சியர் ஜலந்தரை அழைத்து பாராட்டிய பிறகு தான் அவரின் இந்த சாதனை அக்கிராம மக்களுக்கு புரிய வந்துள்ளது. ஜலந்தரின் இந்த சாதனையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது அம்மாவட்ட நிர்வாகம். இவையெல்லாம் உள்ளூர் ஊடகங்களில் செய்தியாகவே ஜலந்தர் நாயக்கின் கடும் உழைப்பு நமக்கு தெரிய வந்துள்ளது.

ரியல் ஹீரோக்கள்!

ஜலந்தர்க்கு முன்பே இதுபோன்று அரும்பெரும் சாதனை புரிந்துள்ளார் பீகாரைச் சேர்ந்த தஷ்ரத் மாஞ்சி. அவர் வாழ்ந்த மலைக்கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. அதனால் நோய்க்கு தன் மனைவியை பறிகொடுத்துவிட்டார். நான் இழந்ததை போல யாரும் இனி தங்களுடைய உறவுகளை ஒருபோதும் இழக்ககூடாது என்பதற்காக இருபத்து இரண்டு ஆண்டுகளாக போராடி 360 அடி சாலை அமைத்துள்ளார். ரியல் ஹீரோவான இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “மவுண்டன் மேன்” என்ற பாலிவுட் படம் 2015ம் வருடம் ஆகஸ்ட் 21 ம் தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவர்களை போன்று கழிப்பிட வசதி இல்லாத கிராமத்திற்கு சொந்த செலவில் கழிப்பிட வசதி செய்து தந்தவர், பெற்ற தாயை மாடியிலிருந்து கீழே தள்ளி சாகடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் யாரென்றே தெரியாத மனிதர்களுக்கு நல்வாழ்வு அமைத்து தந்த குமாரபாளையம் நவீன்குமார் போன்ற ரியல் ஹீரோக்களும் எந்த விளம்பரமும் இல்லாமல் ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றனர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நாமும் அவர்கள் பட்டியலில் இணைய முற்படலாமே!

Related Articles

ஆட்டோ சேவையை மீண்டும் இந்தியாவில் அறிமுக... வாடகை கார சேவை மூலம் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த உபர் நிறுவனம், தற்போது இந்தியாவில் மீண்டும் வாடகை ஆட்டோ சேவையை துவங்கியிருக்கிறது. ஏற்கனவ...
சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?... நாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத...
தமிழ்சினிமா அழிவை நோக்கி செல்கிறது! R... சமீபகாலமாக தமிழ்சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற படம் என்று எதுவும் இல்லை. வசூல் மன்னன் ரஜினியின் காலா படமே பலத்த அடி வாங்கியது. மாறாக இருட்டு அறையில் மு...
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...

Be the first to comment on "மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை குடைந்து 15 கி.மீ சாலை அமைத்த ஜலந்தர் நாயக்! – ரியல் ஹீரோ!"

Leave a comment

Your email address will not be published.


*