ஏழை எளிய மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களின் இருதய சிகிச்சைக்கு தேவையான நிதி திரட்டி தருவது போன்ற அறச்செயல்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ்.
யோகேஸ்வரனுக்கு வீடு
கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வாலிபர்கள் சிலர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அம்மாபேட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக மின்சாரக்கம்பியை பிடித்ததால் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இந்தாண்டு யோகேஸ்வரனின் முதலாமாண்டு நினைவு நாளில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொடுத்து, உங்களுக்கு நானும் பையன் தான் என்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அனிதாவுக்கு நினைவு நூலகம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இருக்கும் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவ கனவு சிதைவடைந்ததை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் அனிதா நினைவு நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார் ராகவா லாரன்ஸ்.
லாரன்ஸைப் போலவே, நிஜத்திலும் ஹீரோவாகத் திகிழ்கிறார்கள் சில ஹீரோக்கள். பல விமர்சனங்களைச் சந்தித்தாலும் சத்தமின்றி உதவிகள் புரிந்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி. பிரகாஷ், அகரம் பவுண்டேசன் நிறுவனர் சூர்யா போன்றோர் உதவிக்கரம் புரிந்து நிஜத்திலும் ஹீரோவாக திகழ்கிறார்கள்.
Be the first to comment on "அனிதா நினைவு நூலகம்: அடிக்கல் நாட்டினார் ராகவா லாரன்ஸ்"