ரசிகர்களிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய ராட்ச்சசன்! – ராட்ச்சசன் விமர்சனம்!

Ratsasan tamil movie review

வழக்கம்போல இந்தப் படமும் படுமொக்கையான தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. காரணம் இது அட்டகாசமான திரைப்படம்.

ஒரு சைக்கோ தொடர்ந்து பள்ளி மாணவிகளை கடத்தி போஸ்ட்மார்டம் செய்யும் டாக்டர்களே நடுங்கும்படி கொடூரமாக கொலை செய்கிறான். அவன் ஏன் அப்படி செய்கிறான்? எதற்காக அப்படி செய்கிறான்? என்ற கேள்விகளுக்கு விடை தேடி இறுதியில் அவர்களை பிடித்தார்களா இல்லையா என்பதே ராட்ச்சசன் திரைப்படத்தின் மையக்கதை.

படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை நமக்குள் பதட்டம்… பதட்டம்… பதட்டம்… இந்தப் படத்தை உருவாக்கியதாலோ என்னவோ வில்லன் யார் என்று தெரிந்ததும் அவனை ரசிகர்கள் கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்துவிட்டனர். அதோடு வில்லன் கையில் கிடைத்தபிறகும் அவனை சுடாமல் பம்மி  நிற்கும் காளி வெங்கட்டையும், பிரச்சினை தலைக்கு மேல் போய்க்கொண்டிருக்கும் வேளையில் தன் பிள்ளையிடம் போனில் கொஞ்சி குலாவும் நாயகனுக்கு வாய்த்த ஈகோ பிடித்த பெண் உயர் அதிகாரியையும் ரசிகர்கள் வெளுத்து வாங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு எதிரியின் கதாபாத்திரம் அச்சத்தை உண்டாக்கும் வகையில் எழுதப் பட்டிருக்கிறது.

படத்தின் இன்னொரு பலம் பின்னணி இசை. ஒரு பேய் படத்திற்கு தரும் இசையை தந்து ரசிகர்களின் பிபியை மேலும் எகிறச் செய்கிறார். அமலாபால் பாத்திரம் அறிந்து போதுமான அளவிற்கு நடித்திருக்கிறார். முனிஸ்காந்த் காமெடியனாக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். அதிலும் தன் மகளை இழந்தபிறகு அவர் கொடுக்கும் ரியாக்சன்கள் அல்டிமேட்.

விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் இது முக்கியமான படம். இயக்குனராக முயற்சிக்கும் இடத்திலும், குடும்ப சூழல் காரணமாக எஸ்ஐ வேலைக்குச் சேர்ந்து அவமானம் படும் இடத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிறிஸ்டோபராக வந்தவரின் உடல்மொழியும், இன்பராஜாக வந்தவரின் நடிப்பும் மிரட்டல்!

கட்டாயமாக தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்! 17 ஹீரோக்களின் நிராகரிப்பு, இயக்குனரின் நான்கு வருட காத்திருப்பு என்று இயக்குனரின் பெருவலியை சுமந்து வந்த இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயம் தியேட்டரில் கண்டுகளிக்க வேண்டும்.

படம் பார்க்கும்போது எழுந்த சில கேள்விகள்:

  1. படத்தின் டீடெய்லிங் அற்புதமாக இருந்த போதிலும் ரீசனிங் சரியாக அமையவில்லை என்று தோன்றுகிறது.
  2. கிறிஸ்டோபரை அனைவரும் மொட்ட மொட்ட என்று கூறியது தெரியாமல் அடுத்தநாள் தாமாக முன் வந்து மன்னிப்பு கேட்கும் மாணவியை கொன்றுவிடு என்று ஒரு தாய் சொல்வாளா? அமிதாப்பின் பா படத்தில் வருவது போல் இளம் வயதிலயே முதியவன் போல் தோற்றமளிக்கும் நபர்கள் தங்களை கேலி கிண்டல் செய்தால் இப்படி மாறிவிடுவார்கள் என்று சொல்வது போல் இருக்கிறது.
  3. வாட்சப், பேஸ்புக் போன்றவை வந்த பின்னும் போன் பேசும்போது வாய்ஸ் பிரேக்காகும் சீன்களை வைக்க வேண்டுமா? உடனே சொல்லியாக வேண்டும் என்ற விஷியத்தை போன் காலில் பேசமுடியவில்லை என்றால் உடனே மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்தி இருக்கலாமே.

Related Articles

குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படு... நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ...
மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 – இந... வந்து விட்டது  மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (Mahindra XUV500 W9) கார்!!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (M...
மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில்... நகரும் படிக்கட்டுகளில் நாட்டின் மிக உயரமானதாக தற்போது வரை இருந்து வருவது மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைந்திருக்கிறது. அதன் உயரம் 1...
ஸ்காட்லாந்து யார்டு தலைவர் ஆகிறார் இந்தி... உலகின் தலை சிறந்த காவல் துறை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்து யார்டின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்க உள்ளார். அவரது பெயர் நீ...

Be the first to comment on "ரசிகர்களிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய ராட்ச்சசன்! – ராட்ச்சசன் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*