இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வசந்த் ரவி. அவருடைய இரண்டாவது படத்தில் (ராக்கி) இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடு இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வர் எனும் அறிமுக இயக்குனர் இயக்க எனை நோக்கிப் பாயும் தோட்டா புகழ் தர்புகா சிவா இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் வெளியாக பரவலான ஆதரவை பெற்று வருகிறது. குறிப்பாக அந்த ட்ரெய்லரில் கீழ்க்கண்ட வசனங்கள் படத்தை வித்தியாசமான கோணத்தில் காண்பிக்கின்றன. இதற்கு முன் இதே சாயலில் தியாகராஜா குமார ராஜாவின் ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படங்களின் ட்ரெய்லர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரில் வரும் வசனங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
” காலம் ஒரு துரோகி
படுபாவி
பிசுனாரி
நேரம் ஒரு நோய்
பிரபஞ்சம் சூழும் பொய்
சுதந்திர வெளியிலே நொடிகள் கூடி போடும் சதியிலே
நேரம் நதியாய் நுரை தள்ளி துள்ளி ஓடுமே
ஆனால்,
கைதியாய் சிறையிலே ஓடு ஓடு என்று உந்தியும்
சிலை போல்
மலை போல்
துடிக்கும் மீனை அடக்கும் வலை போல்
அசராத காலம் ஒரு துரோகி,
படுபாவி,
பிசுனாரி
நேரம் ஒரு நோய்
பிரபஞ்சம் சூழும் பொய்
தனிமையின் மனத் த்திரையிலே வந்து ஆடிய எண்ணங்கள்
மனதின் கோவில் செவியிலே எட்டி பாடிய தருணங்கள்
என் குரல் மறந்து,
தொண்டை மறத்து,
வெளியே நோக்கிய கோவம் உள் பாய
என்னை மீறி எந்தன் எண்ணம் உணர்வு காலத்தை ஆராய
சின்னஞ்சிறு ஆசையெல்லாம் சிறையிலே சுட்டு புதைத்தேன்
எண்ணிய கம்பி எடுத்து நானே என்னை தண்டித்தேன்
என்னை போல் மிருகம் ஒன்றை கண்டதில்லை அதுவரை நான்
மிருகத்திற்கு தீனியாக தனிமையில் நான் மட்டும் தான்
அகமென அரக்கனை ஆதரித்து ஆளவிட்ட பின்
இதயத்தின் இறைவனை ஈவிரக்கம் ஈய வேண்டி
யுகங்கள் தாண்டும் நொடிகள் சுடுக்கி நொறுக்கி விடுவிக்கப்பட்டு
நினைவின் நிழலாய் நிற்கும் உலகம் நிஜத்தில் அழிக்கப்படும்
துண்டித்த பாசக்கயிறு நூல் கொடியாய் காற்றில் ஆடும் திசையில்
இசையில் ஈர்க்க (அப்டித்தான் கேட்டுச்சு)
காலம் ஒரு துரோகி படுபாவி பிசுனாரி
நேரம் ஒரு நோய்
பிரபஞ்சம் சூழும் பொய் “
இந்த வசனங்கள் தான் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. இந்த ட்ரெய்லர் யூடுப்பில் இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
Be the first to comment on "எதிர்பார்ப்பை கிளப்பிய வசந்த் ரவியின் ராக்கி டிரெய்லர்!"