சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான
தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்களில் கடும்
கண்டனத்துக்குள்ளானது.
பாட புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்கள்
சமீபத்தில் நடந்த பல தரப்பட்ட பொதுத்தேர்வுகளில் விராட் கோலியின் காதலி யார்? ஐஸ்வர்யா
தனுஷ் என்ன பொறுப்பில் இருக்கிறார்? போன்ற கேள்விகள் தென்பட்டது. அவை சர்ச்சையை
உண்டாக்க வேண்டுமென்று உருவாக்கப்பட்டதா? இல்லை யதார்த்தமாக எடுக்கப்பட்ட
கேள்வியா? இந்த கேள்விகளை கேட்பதன் அரசியல் என்ன என்று தெரியவில்லை. மேற்கண்ட
இந்த கேள்விகளாவது போட்டித்தேர்வுகளில் கேட்ட கேள்வி.
ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் கண்டனத்துக்குள்ளானதோ பள்ளி மாணவ
மாணவிகளுக்கு கேட்கப்பட்ட கைள்வி. அதுவும் ஆறாம் வகுப்பு படிக்கும் பிஞ்சுகளுக்கு
இப்படியொரு கேள்வி. இந்த கேள்வியின் நோக்கம், இந்த சமூகத்தில் சமத்துவம்
உண்டாகக்கூடாது என்பதற்காகவே பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக
தொடுக்கப்பட்ட வினாகவாக அமைந்துள்ளது.
சிபிஎஸ்இ பாட வினாத்தாள் மட்டுமல்ல, பாடபுத்தகங்களில் கூட இது போன்ற ஏற்றத்தாழ்வை
மாணவர்களிடையே உண்டாக்கும் வகையில் சில படங்கள் உள்ளது. சிபிஎஸ்இ புத்தகங்கள்
மட்டுமல்ல. நமது மாநில பாடபுத்தகங்களில் கூட சில விஷியங்கள் இப்படித்தான் உள்ளது.
பாடபுத்தகங்களின் பிரச்சாரம்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஈரோடு புத்தகத் திருவிழாவில் இயக்குனர் வெற்றிமாறன்
கலந்துகொண்டார். அப்போது அவரிடம், “பாடப்புத்தகத்தை படிக்கும் நேரத்தை குறைத்துவிட்டு
பொதுவான புத்தகங்களை படிப்பது சிறந்த பயனைத் தருமா? “என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ” பாடபுத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா இருக்குறது இல்ல… அதுல ஏதோ
பிரச்சாரத்த தான் பண்றாங்க… அவிங்க நமக்கு தப்பாத்தான் சொல்லிக்குடுக்குறாங்க… ” என்று பாடபுத்தகங்களின் மீதான தனது கருத்தை சொன்னார். ( அதே மேடையில் உதயச்சந்திரன்
ஐஏஎஸ் இருந்தார். அவர் தலைமையில் பதினோறாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம்
செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது).
இங்கு சொல்லிக்குடுக்கும் முறையும் தவறாக இருக்கிறது. சொல்லிக்குடுக்கற விஷியமும்
தப்பாத்தான் இருக்கு.
Be the first to comment on "பாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா இருக்குறது இல்ல! – சிபிஎஸ்இ வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி!"