- காமராஜ் – ஈஸ்வரி என்ற தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார். தாய் தந்தை இருவரும் யூனியன் டிஸ்பென்ஸரியில் நர்சிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்தவர்கள்.
- கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகிலுள்ள பேரூர் என்ற ஊரில் பிறந்தார். எட்டாம் வயசு நடந்துகொண்டிருக்கும் போது குளித்தலைக்கு குடி பெயர்ந்தார்கள்.
- பள்ளி படிப்பில் எப்போதும் முதல் மூனு ரேங்குக்குள் வந்திடுவார். பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை தட்டி உள்ளார்.
- மருத்துவம் படிக்க வேண்டும் என்பது தான் அவருடைய பெற்றோர்களின் ஆசை. 12ம் வகுப்பில் பயாலஜி குரூப் எடுத்துப் படித்தார். பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக மதிப்பெண் குறைந்ததால் இன்ஜினியரிங் சேர வேண்டும் என்ற நிலை. ப்ளஸ் டூ வரைக்கும் பாய்ஸ் ஸ்கூலில் படித்தார். கல்லூரியில் தான் முதன்முறையாக பெண்களோடு சேர்ந்து படித்துள்ளார்.
- திருச்சி செயின்ஜோசப் கல்லூரியில் ஆரம்பத்தில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் எடுத்து படித்தார். பிறகு கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் சேர்ந்து படித்தார்.
- பிடித்த விளையாட்டு கிரிக்கெட். கல்லூரி கிரிக்கெட் டீமில் இருந்தார். அதே போல டிராமடிக் கிளப்பில் சேர்ந்து பல மேடைகள் ஏறி நடித்து பரிசுகள் பெற்றுள்ளார்.
- இயக்குனர் பி. வாசுவின் உதவி இயக்குனரான பரத் சிம்மனிடம் விளம்பர பட உதவி இயக்குனராக பணியாற்றினார்.
- கலக்கப் போவது யாரு சீசன் 3 மற்றும் சீசன் 4ல் கலந்துகொண்டார். அதே போல நாளைய இயக்குனர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே பின்னாட்களில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
- நாளைய இயக்குனர் குறும்பட போட்டிக்கு தேர்வுக்கு ஈசல் என்ற குறும்படத்தை அனுப்பினார். பிறகு என் இனிய பொன் நிலாவே குறும்படம் எடுத்து பாராட்டுக்கள் பெற்றார்.
- சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு காலேஜ் சீனியரான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உதவியுடன் பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆனார். முதல் பாடல் ஜிகிர்தண்டா படத்தில் உள்ள டிங் டாங் பாடல்! நெருப்புடா மற்றும் தெறி பாடல்கள் நல்ல அடையாளத்தை தந்தன. நடிகராக முதல் படம் ராஜா ராணி!
- சென்னையில் அழகுக் கலைப் பயிற்சி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த சிந்துஜா என்ற பெண்ணை காதலித்து 2013ல் திருமணம் செய்துகொண்டார்.
- இவ்வளவு சாதித்த இயக்குனர் காமராஜாவும் நடிகர் சிவகார்த்திகேயனும் கல்லூரி முடித்த பிறகு ஆறு மாதங்களுக்கு பேசாமல் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.
Be the first to comment on "இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!"