பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்துள்ளது.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு
கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் ஸ்டெர்லைட் உருக்கு ஆலைக்கான அனுமதிக் காலம் முடிவுக்கு வந்தது. ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கோரி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆலை நிர்வாகம் மனு செய்திருந்தது. விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் விண்ணப்பித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களின் காரணங்களால், ஆலை விரிவாக்கத்துக்குத் தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆலையை தொடர்ந்து இயக்கவும்
தற்போது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது.
தடை விதித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்
மறு உத்தரவு வரும் வரை கால வரையின்றி ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆலைத் தரப்பில் செய்யப்பட்டிருக்கும் மனுவில் நிறைய விளக்கங்களையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் செயலாளர் மற்றும் இணக்க அலுவலர் பூமிகா சூட் இது குறித்து பேசும் போது ‘தூத்துக்குடியில் இயங்கும் உருக்காலையை புதுப்பிக்க அனுமதி கூறியிருந்தோம். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கு விளக்கம் கேட்டிருக்கிறது வாரியம். பராமரிப்பு பணிகளுக்காக ஆலை பதினைந்து நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, வாரியத்தின் இந்த உத்தரவின் காரணமாக ஆலை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியானது, காற்று தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம் பிரிவு 21 மற்றும் நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம், 981 மற்றும் பிரிவு 25, 1974 கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.மக்களின் போராட்டங்களுக்கு தமிழக அரசு செவி சாய்த்திருப்பது ஆரோக்கியமான மாற்றம் ஆகும்.
Be the first to comment on "ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து செயல்பட தடை விதித்தது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்"