தலைமை நீதிபதி உத்தரவு:
இந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை பறித்த 377சட்டப்பிரிவு. இன்னொன்று தற்போது ரத்து செய்யப்பட்ட கள்ள உறவு தண்டணை சட்டப்பிரிவு 497. ஆனால் இந்த இரண்டு உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பெரும்பாலானோர் முழுவதுமாகப் புரிந்து கொள்ளவில்லை.
தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு.
தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை, கள்ளக்காதல் தவறு கிடையாது திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை,
பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும், சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான். பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது. சமுதாயம் நினைப்பதைதான் பெண்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. திருமணத்திற்கு மீறிய பாலியல் உறவு குற்றம் கிடையாது. ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட கூடாது. பெண்ணின் எஜமானர் கணவர் அல்ல என்று தீர்ப்பு வாசித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
இதற்கு நெட்டிசன்களின் கருத்து:
* சும்மாவே தினம் தினம் கள்ள காதல் கொலை அதிகரிக்குது இதுல நீதிமன்றம் இப்படி சொன்ன விளங்கும்.
* தலைமை நீதிபதி உறவினர் யாருக்காவது இந்த மாதிரி சம்பவம் நடந்தா அப்பவும் இப்படி தான் தீர்ப்பு சொல்வாரா !
* பேசாமல் நல்லவனாக வாழ்வதுதான் குற்றம்னு சொல்லிடுங்க ஜட்ஜய்யா !
* இனி லட்சுமிகளுக்கு கொண்டாட்டம்தான்!
என்று தங்கள் வேலையை காட்டத் தொடங்கிவிட்டார்கள். ஓரினச் சேர்க்கை தண்டனைச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போது நம்ம ஆட்கள் என்ன தவறு செய்தார்களோ அதே தவறை தான் தற்போதும் செய்து வருகிறார்கள்.
ஒரு பெண் யாருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு. மாறாக அவளுடைய கணவனுக்கோ, அவளது தாய்க்கோ அதில் சம்பந்தம் இல்லை. காரணம் கேள்வி கேட்டு அதிகாரம் செய்யும் அவர்கள் யாரும் ஒழுக்கமாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பினால் கண்றாவியான பதில்கள் கிடைக்கும்.
பாலகுமாரன் :
இதை தான் பாலகுமாரன் அன்றே சொன்னார். காதலில் நல்ல காதல் கள்ள காதல் என்று எதுவும் இல்லை. காதல் என்றால் அது காதல் அவ்வளவு தான்! என்றார். அவர் எப்போதோ சொன்ன கருத்து இன்னமும் யாராலும் ஏற்று க்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு நம்முடைய சிந்தனைகள் பிற்போக்காக இருக்கிறது.
மற்றவர் யாருடைய வாழ்க்கைக்கும் தொந்தரவு இல்லாத காதல் நல்ல காதலே. திருமணம் முடிந்து வேறொருவருடன் காதல் ஏற்பட்டால் முறையான மணமுறிவு செய்துகொண்டு புது வாழ்க்கையை தொடங்கினால் இங்கு எதுவும் தவறு இல்லை.
Be the first to comment on "தகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு"