ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந்த நில நடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 21 கிலோ மீட்டர் அளவுக்கு உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்ததாகவும், இருநூறுக்கும் அதிகமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது. அறுபதுக்கும் மேற்பட்டோரை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை அன்று அந்நாட்டு நேரத்தின் படி இரவு 11 : 50 க்கு இந்த நில நடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இன்னும் நிறையப் பேர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஆசிய நாடுகளில் நிகழ்ந்த நில நடுக்கங்களிலேயே இந்த தைவான் நில நடுக்கம் தான் பயங்கரமானது என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹுவாலியன் நகரத்தில் ஒரு லட்சம் மக்கள் வசித்து வந்தனர். கிட்டத்தட்ட 40000 வீடுகள் நில நடுக்கத்திற்குப் பிறகு தண்ணீர் இல்லாமலும், 1900 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Be the first to comment on "தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்"