தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் இந்த சாதி. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் செம்மறி ஆடுகளாகத் தான் இருப்போம் என்று பிடிவாதமாக இருப்பதில் தமிழர்களை மிஞ்ச ஆளே இல்லை. காரணம் கஜா புயலின் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முயன்று வருகிறது தமிழக அரசு.
சோத்துக்கே வக்கு இல்லாத இந்த சூழலிலும் நம் மக்களுடைய சாதி பாகுபாடு மட்டும் மாறவே இல்லை. இந்தந்த பள்ளிக்கூடத்தில் இந்தந்த சாதியினர் தங்க வேண்டும், நிவாரண பொருட்களை இந்தந்த சாதியினர் முதலில் வாங்க வேண்டும், அதன் பிறகு மற்ற சாதியினர் வாங்க வேண்டும், இந்தந்த சாதியினர் தங்கும் இடத்தில் இந்தந்த சாதியினர் ஆதரவு கேட்க கூடாது என்று பாழாப்போன விதிமுறைகளை விதித்துக் கொண்டு நாசமாய் போவதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனை கொட்டும் மழையில் சுழட்டி வீசும் காற்றில் சிரமப்பட்டு தேடி அலைந்து கண்டுபிடிக்கிறார்கள் நம் மக்கள்.
சாதி தான் முக்கியம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்றார் அறிஞர் ஒருவர். அவருடைய கருத்துக்கள் தற்போது பல இளைஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு பகிரப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒவ்வொரு சாதியினரும் தங்கள் பிள்ளைகளுக்கு கயிறு கட்டிக்கொண்டு வாட்சப் குரூப்பில் இணைத்து வைத்துக் கொண்டு விஷம் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அரமெண்டல்கள்.
இவர்கள் எல்லாம் உயிரோடு இருப்பதை விட புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதே மேல் என்றும் இவர்கள் மேல் இடி விழ வேண்டும் என்றும் இவர்கள் சாதி சாதியாய் பிரிந்து நிற்கும் நிலங்கள் எல்லாம் பிளந்துகொண்டு பூமிக்குள் புதைய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூக வலைதள வாசிகள். நக்கிட்டே குடிங்கடா என்பதற்கேற்ப முட்டாள்களாகவே இருக்கிறார்கள் நம் மக்கள்.
Be the first to comment on "இக்கட்டான சூழலிலும் சாதி பார்க்கும் தமிழக மக்கள்!"