கடந்த சில தினங்களாகவே சர்கார் பட இசை வெளியீட்டு விழா குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துகிறோம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துகிறோம் என்று கூறியவர்கள் அங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காததால் கடைசியாக சாய்ராம் கல்லூரியில் இசை வெளியீட்டு விழாவை நடத்தி இருக்கிறார்கள். இசை வெளியீட்டு விழா எப்படி இருந்தது?
வழக்கம்போல விஜய் புகழாரம் தான் அரங்கேறியது. சரி எதோ ஒரு லாபநோக்கத்திற்காக அவர்கள் அப்படி பேசுகிறார்கள் விஜய் சாதாரணமாக முடித்துக்கொள்வார் என்று நினைத்தால் அவர் அதற்குமேல் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும்:
விஜய் படத்தின் எல்லா இசை வெளியீட்டு விழாக்களிலும் ஏகப்பட்ட ஜால்ட்ராக்கள் நிரம்பி இருப்பார்கள். அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டால் சிரிப்பு வராமல் இருக்காது. அந்த அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அத்தனையும் ஏதோ ஒரு பயன் கருதியே.
அந்த வகையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஏகப்பட்ட ஜால்ட்ராக்கள் நிரம்பி இருந்தார்கள். விஜய் அண்ணா தான் மாஸ் என்று சொம்பு தூக்கினர் பலர். அதே போல, விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவன் வர வேண்டும் என்று போகிற போக்கில் உசுப்பேத்தி விட்டனர் சிலர். செல்வாக்கு மிகுந்த நடிகர் ஒருவருக்கு சொம்பு தூக்கினால் தான் நம்ம வண்டி ஓடும் என்ற மனநிலையில் இருந்து என்றைக்குத் தான் இவர்கள் வெளிவர போகிறார்களோ? எல்லோரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் நாமளும் புகழ்ந்து தள்ளுவோம் என்று அரங்கம் முழுக்க ஏகப்பட்ட புகழாரங்கள்.
அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? ஏற்கனவே உடைத்த பர்னிச்சர்கள் பத்தாதா? சினிமா நடிகர்கள் எல்லாம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்தால் உலக அரங்கில் தமிழனுக்காக குரல் கொடுத்து சிறை சென்ற சாமான்யர்கள் அரசியலுக்கு வர முடியுமா?
விஜய் பேச்சு:
வழக்கம்போல அறிவுரை, குட்டிக்கதை, ரெண்டு மூனு பஞ்ச் என்று கலந்துகட்டி பேசினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேசத் தொடங்கியவர் நண்பா, நண்பிகள் என்று கலகலவென்று பேசத் தொடங்கி படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசியது தான், ” உசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும்! ” என்ற வசனம். அந்த வசனம் அவருடைய ஜால்ட்ராக்களுக்காக அவர் எழுதிய வசனம் போல இருந்தது. கஷ்டப்பட்டு உழைச்சு விமர்சனத்துக்குள்ளாகி சிக்கி சின்னாபின்னமாகி இந்த நிலைமைக்கு வந்துருக்கேன். அது எப்படிடா அப்போதெல்லாம் என்னை விமர்சனம் செஞ்சவன்லாம் இப்ப கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி ஜால்ட்ரா அடிக்குறிங்க என்று சொல்வது போல் இருந்தது அந்த வசனம்.
Be the first to comment on "உசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும்! – நடிகர் விஜய் அடித்த பஞ்ச்!"