பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் ரூபாய் பரிசுடன் வருடந் தோறும் வழங்கப் படும் வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.
நாளை முதல் ( ஜனவரி 7 ம் தேதி முதல் ) அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகையை பற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது.
பொங்கல் பரிசாக கார்டு ஒன்றுக்கு நூறு ரூபாய் மட்டுமே வழங்கப் படுவதாக திட்டம் இருந்ததாகவும் ஆளுநர் உரையின் போது நூறு ரூபாய் என்பது ஆயிரம் ரூபாய் என தவறுதலாக மாற்றப் பட்டு விட்டது என்றும்… வெளியான அறிவிப்பை இனி வாபஸ் வாங்கவும் முடியாது… ஆயிரம் ரூபாய் என ஆசை காட்டிவிட்டு நூறு ரூபாய் என சொன்னால் மக்கள் கோபம் கொள்வார்கள், தேர்தல் நேரத்தில் எதற்கு வம்பு… என்று எப்படி அறிவிப்பு வெளியானதே அதையே செய்து விடுவோம் என்று தற்போது அதையே நடைமுறை படுத்த உள்ளனர்.
இதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனவரி 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் நாளொன்றுக்கு 300 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் மற்றும் அதனுடன் பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்து உள்ளது.
குறிப்பாக அந்த ஆயிரம் ரூபாய் பணத்தை உறையில் வைத்து தான் தர வேண்டும் என்றும் இரண்டு 500 ரூபாய் தாள்களாகவும் தான் தர வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.
Be the first to comment on "பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயா? நூறு ரூபாயா? ஆளுநர் உரையில் மாறியது எப்படி?"