- சிரிக்க வைத்ததை தவிர யாரையும் அழ வைக்காதவர், முதல்முறையாக எல்லோரையும் அழ வைத்திருக்கிறார் கிரேஸி மோகன்
நகைச்சுவை என்பது பண்படுத்தத்தானே தவிர, புண்படுத்த அல்ல என்பதை அறிந்தவர்
– வைரமுத்து
- கிரேஸி மோகன் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்; அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்களுக்கு ஆறுதலை கூறிக்கொள்கிறேன்
தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் கிரேஸி மோகன்; அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடைநாடாக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு
-மு.க.ஸ்டாலின்
- மக்கள் முகம்சுளிக்காத வகையில் வசனங்களை எழுதியவர் கிரேஸி மோகன்
நகைச்சுவை வசனகர்த்தாவான கிரேஸி மோகன் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார்
– நடிகர் எஸ்.வி.சேகர்
- கிரேஸி மோகன் மறைவு தமிழ் நாடகத்துறைக்கும், திரைப்படத்துறைக்கும் பேரிழப்பு
கிரேஸி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது
கிரேஸி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
– முதல்வர் பழனிசாமி
- பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
– தமிழிசை
- மிகப்பெரிய வசனகர்த்தாவாக இருந்தாலும் எளிமையின் அடையாளமாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன்
– தனஞ்ஜெயன்
- என் வாழ்வின் தொடக்கமாய் இருந்து… என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து… என் மாதாவாக… பிதாவாக… குருவாக… இறைவனாக இருந்தவர் இன்று இறைவனிடம் சென்று விட்டார். நீங்கள் இருந்த வரை உங்களால் சிரித்து மட்டுமே பழகிய நாங்கள் முதல் முறையாக அழுகிறோம்.. நீங்கள் இல்லாததால்…
– நடிகர் சதீஷ்
- #CrazyMohan sir is no more. What a sad day for cinema, theatre, laughter and life. There will never be another like him. Prayers for his soul.Deepest condolences to the family. He was a huge part of our collective #Tamil consciousness and our ability to make or laugh at a joke.
– சித்தார்த்
- Really saddening to have lost an awesome writer, stage performer and an actor who was phenomenal in all ways.. RIP #CrazyMohan sir!! The industry will definitely miss you and your work.. God bless his family with strength to bare this irreplaceable loss..
– அருண் விஜய்
- Even few days back when I met my friend dir @rs_prasanna we were talking about #CrazyMohan sir and how he added value to our film #KSS his writings and performances have always been top notch. His comedy sense non stop. A fantastic human. RIP Crazy sir. Will miss u
– பிரசன்னா
Be the first to comment on "கிரேஸி மோகன் இழப்பு குறித்து பிரபலங்களின் டுவிட்கள்!"