சர்கார் படம் குறித்து பிரச்சினை எழுந்த காலத்தில் இருந்தே இந்த மூட்டைப் பூச்சியின் தொந்தரவு இணையத்தை உபயோகிப்போருக்கு இருந்து வருகிறது. கொஞ்சம் கோபத்த அடக்குங்க தலைவா… உணர்வுகள கட்டுப் படுத்துங்க… உங்க கோபம் புரியுது… என்று பலரும் பல விதமாக கூறிப் பார்த்தும் இந்தக் இளங்காளை இணையத்தில் சீறிப் பாய்கிறது.
4 எலும்பு, 1 மீட்டர் தோல், 1/2டம்ப்ளர் ரத்தம் மட்டுமே இவருடைய உடலில் இருக்க… ஆளுங்கட்சி அமைச்சர்களையும் தமிழக முதல்வரையும் இவர் பேசும் வார்த்தைகள் எல்லாம்… காதில் இன்பத் தேன் வந்து பாயும்… இப்படி பேச இனி ஒருத்தன் பிறந்து வரணும்…
சர்கார் பிரச்சினை முடிந்த கையோடு தம்பி பள்ளிக் கூடத்துக்குப் போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து டிக் டொக் மூலமாக அவனுடைய வீடியோக்கள் பரவிக் கொண்டே இருக்கிறது. இன்றைய சிறுசுகளை செல்போன் எவ்வளவு பைத்தியமாக்கி வைத்து இருக்கிறது என்பதற்கு இந்தச் சிறுவன் ஒருவனே உதாரணம்.
ஆளுங்கட்சியைச் சார்ந்த உள்ளூர் கட்சிக் காரர்கள் அந்தச் சிறுவனை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும் நமக்கு இவன் மீது கோபமே அதிகம் வருகிறது. பெரிய மனுசன் கணக்காக அவன் பேசும் பேச்சு அப்படி. கூட இருந்து உசுப்பி விடும் அர மெண்டல்களை முதலில் அடித்து வெளுக்க வேண்டும்.
சினிமாவினாலும் செல்போனில் பார்க்கும் கண்ட கண்ட விஷியங்களாலும் இந்தப் பொடியனுக்குள் எவ்வளவு வக்கிரம் நிறைந்து கிடக்கிறது. இவன் பேசும் வார்த்தைகளை வைத்தே இவன் பள்ளிக்குச் செல்லும் பையனா அல்லது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் சிறுவனா என்பதை நம்மால் யோசித்து பார்க்க முடிகிறது.
நடிவடிக்கை எடுக்காத உறவினர் :
இந்தச் சிறுவனின் எதிர் காலம் குறித்து ஏற்கனவே பல பத்திரிக்கைகள் எழுதி இருந்தாலும் இவன் ஆட்டம் அடங்குவதாக இல்லை. செல் போன் மோகத்தினால் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டு இருக்கும் இவனை கண்டிக்க உண்மையிலயே வீட்டில் ஆள் இல்லையா. உற்றார் உறவினர்கள் யாரும் எடுத்துச் சொல்வது இல்லையா? இவன் போன்ற சிறுவர்கள் நாளுக்கு நாள் இன்னும் அதிகரிப்பார்களே…!
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போன்றோர் செல்போன் செயலிகளில் பிரபலமாக முயற்சிப்பதை தடுக்க எதாவது நடிவடிக்கை அரசு சார்பில் எடுக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் டிக்டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் அதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினை பெரிதானால் தான் நடவடிக்கை எடுப்போம் என்பது தமிழனக்குப் பழக்கப்பட்ட விஷியம் போல.
Be the first to comment on "அகில உலக ஆணழகனின் அம்மா அப்பா யார்? இந்த வீரனை கண்டிக்க யாருமே இல்லையா?"