கோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?

Why to read Gopinath's Password book

நீயா நானா புகழ் கோபிநாத் மண்டபத்ரம், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டாம், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்கியமான புத்தகம் “பாஸ்வேர்டு”. புத்தக திருவிழாக்களில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் அதுவும் ஒன்று!!!!!!!!!!

மொத்தம் 31 அத்தியாயங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த அத்தியாயங்கள் என்னென்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

அத்தியாயம் 1 – குழந்தைகளைக் கெடுக்கும் பெரியவர்கள்

அத்தியாயம் 2 – பணத்தை நோக்கி ஓடும் பொறுமையிழந்த சமூகத்தை…

அத்தியாயம் 3 – மேடையில் இருப்பவர்கள் பற்றியும் மேடை ஏறுவது எப்படி என்றும்…

அத்தியாயம் – 4 – பிள்ளைகள் தற்கொலை

அத்தியாயம் 5 – ப்ரீ டீன் 9- 12 பருவம் எப்படிப்பட்டது என்று…

அத்தியாயம் 6 – போகிற இடங்களில் மனிதர்கள் உதவுவார்கள்…

அத்தியாயம் 7 – பழகிய மனிதர்களையும் பழகிய இடங்களையும் பல நாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது நமக்குள் தோன்றும் உணர்வுகளை அழகாக எழுதியுள்ளார்…

அத்தியாயம் 8 – காலம் ஒருவனை மாற்றிவிடும்

அத்தியாயம் 9 – தளராத நம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும்

அத்தியாயம் 10 – பிடித்தமான விஷியங்களை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது

அத்தியாயம் 11 – தேவையற்ற பொருட்களை வாங்கி சிக்கனம் இல்லாமல் சிக்கலில் சிக்கித் தவிப்பது

அத்தியாயம் 12 – வார்த்தைகளின் பலம் என்ன என்பது ஒருத்தரை மட்டம்தட்ட வீழ்த்த அதிக வார்த்தைகள் இருக்கிறது ஆனால் வாழ வைக்க நம்பிக்கையான வார்த்தைகள் குறைவாகவே உபயோகிக்கிறோம்.

அத்தியாயம் 13 – செய்கிற வேலையை நேசித்துச் செய்யுங்கள்

அத்தியாயம் 14 – பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத்தர வேண்டும்

அத்தியாயம் 15 – பிள்ளைகளின் ஆதரவு இல்லாமல் தவிக்கும் முதியோர்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்.

அத்தியாயம் 16 – அதிகாரம் எங்கு செயல்படுகிறது. எங்கு அமைதியாக இருக்கிறது

அத்தியாயம் 17 – முழுக்கவனத்துடன் நம்மால் வேலை செய்ய முடிவதில்லையே ஏன்…

அத்தியாயம் 18 – இயந்திரங்களால் மின்னணுக்கருவிகளால் நாம் வாழ்க்கையின் பெரும்பகுதியை இழந்துகொண்டு இருக்கிறோம்…

அத்தியாயம் 19 – மார்க்கெட்டிங் துறையில் அலைந்து திரியும் இளைஞர்களைப் பற்றி கூறியிருக்கிறார்.

அத்தியாயம் 20 – கடன் எப்படியெல்லாம் ஒரு மனிதனை நாசம் செய்யும் என்பதை விவரிக்கிறார்.

அத்தியாயம் 21 – வயதான செக்யூரிட்டிகளைப் பற்றி கூறுகிறார்.

அத்தியாயம் 22 – பஸ்டாண்ட்களில் ஒலிக்கும் ரேடியோ ஒலிப்பெருக்கிகள் பற்றியும் விளையாட்டு மைதான ரேடியோ ஜாக்கிகள் பற்றி அழகாக கூறுகிறார்.

அத்தியாயம் 23 – மற்றவர்கள் நம்மை வியந்து பார்க்க வேண்டுமென்று ஆடம்பர பொருட்களை வாங்குவது அபத்தம் என்கிறார்

அத்தியாயம் 24 – மெஷின் வாழ்க்கையால் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சமான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் இழக்கிறோம் என்கிறார்.

அத்தியாயம் 25 – போட்டாக்கள் நினைவுகளைச் சுமக்கின்றன

அத்தியாயம் 26 – ஜாதகம், ராசி, சகுனம் பார்ப்பவர்களைப பற்றி கூறி இருக்கிறார்.

அத்தியாயம் 27 – இன்று பெரும்பாலானோர் யாரும் வீட்டை நேசிப்பது இல்லை என்பது பற்றி கூறுகிறார்.

அத்தியாயம் 28 – வேலை செய்யும் இடங்களில் சீனியர்களின் கண்டிப்பும் வீட்டில் பள்ளிக்கூடத்தில் பெரியவர்களின் கண்டிப்பும் அவசியம் அது உதவும் என்கிறார்.

அத்தியாயம் 29 – பண்டிகைகளின் போது இருந்த உற்சாகம் அதற்கான காத்திருப்பு இன்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதே என்பது பற்றி கூறுகிறார்

அத்தியாயம் 30 – தவறு என்பது தெரியாமலே நாம் தவறு செய்துகொண்டு இருக்கிறோம் என்று ஆசிரியர்களை பெரியவர்களை என்று பலரை சுட்டிக்காட்டியுள்ளார்…

அத்தியாயம் 31 – இந்தப் பூமி கெட்டவர்களை மட்டுமே கொண்ட உலகம் இல்லை ஆங்காங்கே நல்லவர்களும் இருக்கிறார்கள் என்கிறார்…

நானும் புத்தகம் படிப்பேன் என்று பெருமை தட்ட நினைப்பவர்களும், ஆரம்ப கட்ட வாசகர்களும், நீயா நானாவின் தீவிர ரசிகர்களும் தாராளமாக இந்தப் புத்தகத்தை வாங்கலாம். வெகுஜன மக்களுக்குப் பிடித்த வகையிலே புத்தகம் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

Related Articles

செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்த... கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செ...
சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்... Pariyerum Perumal (2018) - IMDB Rating - 9.6/10 எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் ந...
Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய ... இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்...
“நம்மள மாதிரி பசங்களாம் ஒவ்வொரு வா... தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்இசை : இமான்எடிட்டிங் : ரூபன்ஒளிப்பதிவு : நீரவ் ஷாகதை திரைக்கதை வசனம் இயக்கம் : பாண்டியராஜ்நடிகர்கள் : சிவ...

Be the first to comment on "கோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?"

Leave a comment

Your email address will not be published.


*