உங்களுக்கு குறும்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமா? குறும்படங்கள் பற்றிய சில தகவல்கள் இங்கே!

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சில குறும்படங்கள் பற்றிய மீம்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் குறும்படங்கள் எங்கே உள்ளது என்று தேடிய போது அவை பிரபல யூடுப் தளமான moviebuff tamil ( first clap season 2ல்) கிடைத்தது. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள். அத்தனையும் வித்தியாசமான கதைக்களத்துடன் தனித்தனி ரகம். இவற்றில் அதிக லைக்ஸ் பெறும் குறும்படம் தமிழகத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று கூறுகிறார்கள். அதனாலயே குறும்பட கால நேரத்தை 3:30 என்று நியமித்திருக்கிறார்கள். குறும்படங்கள் எப்படி என்பதை பார்ப்போம்.

கண்ணாம்பூச்சி என்ற குறும்படத்தை விஜி பாலசுப்பிரமணியம் இயக்க மேயாதமான் இந்துஜா நடித்துள்ளார். பள்ளி கூடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதே போல் பணி இடத்தில் நடக்கும் பாலியல் தொல்லையை நடிகர் சம்பத்ராஜின் இயக்கத்தில் உருவான பச்சோந்தி குறும்படமும், ஆட்டோக்களில், டாக்சிகளில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லையை சத்யாவின் OTP 29 – 12 என்ற குறும்படமும் பதிவு செய்து உள்ளது. சாய் ஸ்ரீனிவாசின் நிலா குறும்படம் ஓரினச் சேர்க்கையாளருக்கான சுதந்திரம் பற்றியும், கிஷோர் குமாரின் சோசியல் மீடியா சுப்ரமணியம் குறும்படம் வாட்சப்பில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா என பரிசோதித்து பிறகு உங்கள் சமூக சேவையை ஆத்துங்கள் என்றும், கமல்ராஜின் புழுகுனி குறும்படம் தவறான சில இணையதள பக்கங்கள் சமூக பிரச்சினைகளை எப்படி பொய் சொல்லி திசை திருப்புகிறது என்பதை பற்றியும், லோகியின் மயிர் குறும்படம் விவசாயிகளின் உயிரை நாம் எல்லாம் மயிர் போல எண்ணுகிறோம் என்ற கருத்தையும் பதிவு செய்து உள்ளது. இதே போல P.கலை செல்வனின் போன்கால் குறும்படம் தொடரும் வரதட்சணை பற்றியும், சதீஷ் பழனியப்பனின் காத்து என்ன விலை சார் குறும்படம் காற்று மாசுபாடு குறித்தும், மரம் வளர்ப்பு பற்றியும் பேசி உள்ளது. கிட்டத்தட்ட முக்கால்வாசி குறும்படங்கள் மெசேஜ் சொல்லும் டைப். ஷார்ட் பிலிம் என்றால் அதில் ஒரு சோசியல் மெசேஜ் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் போல. மேலே குறிப்பிட்ட படங்கள் மெசேஜ் சொன்னாலும் அவை எல்லாம் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கின்றன. பி. தினேஷ் குமாரின் டாக்டர் ஆப் இந்தியா குறும்படத்திற்கு இந்தப் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைக் கொடுக்கலாம். நல்ல கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

மெசேஜ் என்று இல்லாமல் வித்தியாசமான ஒரு பக்க கதையை திரை வடிவில் சில இயக்குனர்கள் கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணுவின் கல்கி குறும்படம் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு உள்ளது. அடுத்ததாக, வினோத்தின் நரித்தந்திரம் முற்றிலுமாக வித்தியாசமான முயற்சியுடன் களம் இறங்கி உள்ளது. இந்தப் படமும் பாராட்டுகளை அள்ளி வருகிறது. கிராவின் A Book குறும்படம் போலீஸ்காரர்களின் தந்திரத்தை தோலுரிக்கும் விதமாக உள்ளது. கற்றவை பற்றவை கொஞ்சம் ஜாலி நிறைய சீரியஸான குறும்படம். மறக்காமல் இதை பாருங்கள்.

இப்படி பலவித கருத்துக்களை மையப்படுத்தி பல குறும்படங்கள் யூடுப்பில் இன்னும் பல தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் குறும்பட தொகுப்புகளின் பட்டியலில் ஆகச்சிறந்த குறும்படங்கள் என்றால் அது காலம் கடந்தும் காதல் என்ற குறும்படம். காரணம் அது முதியோர் திருமணம், முதியோர் காதலை பற்றி பேசி உள்ளது. இன்றைய இளைய சமுதாயம் முதியோர்களை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை பெருகி வரும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம். நேரம் கிடைக்கும்போது இந்தக் குறும்படங்கள் அனைத்தையும் கண்டுகளியுங்கள்.

Related Articles

உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...
கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் ... ஐஐடி கரக்பூரில் உயிர் தொழில்நுட்ப துறையில்(Biotechnology) முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் மாணவி ரம்யா வீறுபோட்லா. இவர் கழிவு நீரில் இருக்கும் பாக்ட...
டெல்லி டேர்டெவில்ஸ் (DD) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர... இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவி...

Be the first to comment on "உங்களுக்கு குறும்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமா? குறும்படங்கள் பற்றிய சில தகவல்கள் இங்கே!"

Leave a comment

Your email address will not be published.


*