” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல ” – காலா பாடல்கள் எப்படி?

இன்று காலா படத்தின் இசை வெளியீடு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து உள்ளது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அந்தப் பாடல்களைப் பற்றி பார்ப்போம்.

சந்தோஷ் நாராயணன், உமாதேவி, கபிலன், அருண்ராஜா காமராஜ், பிரதீப் குமார் என்று ரஞ்சித் படத்தில் எப்போதும் இருக்கும் கூட்டணி தான் இந்தப் படத்திலும். கபாலி படத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து ஒன்பது பாடல்களை தந்து உள்ளது. அவற்றில் ” வாடி என் தங்க சேல… நீ இல்லாட்டி நான் ஒன்னும் இல்ல… ” என்ற பாடல், உமா தேவியின் ” கண்ணாம்மா”  பாடல் ஆகிய இரண்டு மட்டுமே சாப்ஃட் டைப். மற்றவை எல்லாம் அதிரடி, மாஸ், உணர்ச்சிமிகு பாடல்கள் டைப்.

அருண் ராஜா காமராஜின் “செம வெயிட்டுப்” பாடல் ரெட்ரோ டைப். கபாலியின் நெருப்புடாவுக்கு இணையாக வந்திருக்க வேண்டிய பாடல். கொஞ்சம் சறுக்கி விட்டது. கபாலி படத்தில் “உலகம் ஒருவனுக்கா”, ” வீரத்துறந்தரா… ” என்று இரண்டு உரிமை மீட்புப் பாடல்கள் இருந்தது. இந்தப் படத்தில் ” உரிமையை மீட்போம் ” ” போராடுவோம்… ” தெருவிளக்கு வெளிச்சத்துல ” ” நிக்கல் நிக்கல் ” என்று நான்கு உணர்ச்சி மிகுந்த பாடல்கள். இந்த நான்கு பாடல்களும் வறுமையை அழிப்பது, நில உரிமையை மீட்பது, ஒற்றுமையாய் வாழ்வது என்று உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கையை அப்படியே கூறுகிறது. மெர்சல் படத்தில் அட்லி ” மருத்துவமனை அரசியல்” குறித்து கொஞ்சம் பற்ற வைத்ததை இந்தப் படத்தில் பாடல் வரியில் உபயோகித்திருக்கிறார்கள்.

கபாலியின் உலகம் ஒருவனுக்கா பாடலில் மேட்டுக்குடி வர்க்கத்தினரை பற்றி சில வரிகள் இருந்தது. அதனால் படம் பல எதிர்ப்புகளை சந்தித்தது. அதை போல் இந்தப் படத்தில் நிக்கல் நிக்கல் பாடல் ” கிளம்பு… கிளம்பு… விடிஞ்சிடுச்சு… ” வரிகளை கொண்டு அதிகார வர்க்கத்தினரை குறி வைத்து தாக்குவது போல் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்காகவே காலா படம் பல எதிர்ப்புகளை சந்திக்கும். நிலத்தை மீட்போம் என்றெல்லாம் வரிகள் வைத்திருப்பதால் இந்தப் படமும் கபாலி போன்று ரிலீசான முதல் இரண்டு நாட்களுக்கு வெகுவாக மட்டம் தட்டப்படும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

“போராடுவோம்… போராடுவோம்… ” என்ற பாடலும், ” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல… ” என்ற பாடலும் செம ஹிட் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கற்றவை பற்றவை பாடலின் விசில் மற்றும் கண்ணம்மா பாடலில் வரும் அனந்துவின் விசில் இரண்டும் இன்னும் சில நாட்களுக்கு பலருடைய செல் போன்களில்  அடிக்கடி ஒலிக்கும்.

Related Articles

ரேசன் அரிசின்னா அவ்வளவு கேவலமா போயிடுச்ச... பசி காரணமாக பள்ளிக்கூடம் பக்கம் ஏழை மாணவர்கள் செல்லாமல் சிறுவயதிலயே வேலை வறுமை என்று அலைகிறார்கள், தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் என்ற நோக...
ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் ... 1.நடிகர் சதீஷ் :மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வரு...
தனுஷ் நடிப்பில் தமிழில் மறு ஆக்கம் காண்க... குறைந்த விலை சானிட்டரி நாப்கின் தயாரித்து புரட்சி செய்த அருணாசலம் முருகானந்தம் அவர்களின் கதையை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம் பேட்மேன். அருணா...
ஹாட்டின்களை அள்ளும் ஹலிதா சமீம்! –... தமிழ் சினிமாவில் ஒரு அழகான படம் வந்து... ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை அள்ளிக் கொடுக்கிற மாதிரி ஒரு படம் வந்து... ரொம்ப நாளாச்சுப்பா என்ற ஒரு பேச்சு ரசிகர்க...

Be the first to comment on "” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல ” – காலா பாடல்கள் எப்படி?"

Leave a comment

Your email address will not be published.


*