” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல ” – காலா பாடல்கள் எப்படி?

இன்று காலா படத்தின் இசை வெளியீடு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து உள்ளது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அந்தப் பாடல்களைப் பற்றி பார்ப்போம்.

சந்தோஷ் நாராயணன், உமாதேவி, கபிலன், அருண்ராஜா காமராஜ், பிரதீப் குமார் என்று ரஞ்சித் படத்தில் எப்போதும் இருக்கும் கூட்டணி தான் இந்தப் படத்திலும். கபாலி படத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து ஒன்பது பாடல்களை தந்து உள்ளது. அவற்றில் ” வாடி என் தங்க சேல… நீ இல்லாட்டி நான் ஒன்னும் இல்ல… ” என்ற பாடல், உமா தேவியின் ” கண்ணாம்மா”  பாடல் ஆகிய இரண்டு மட்டுமே சாப்ஃட் டைப். மற்றவை எல்லாம் அதிரடி, மாஸ், உணர்ச்சிமிகு பாடல்கள் டைப்.

அருண் ராஜா காமராஜின் “செம வெயிட்டுப்” பாடல் ரெட்ரோ டைப். கபாலியின் நெருப்புடாவுக்கு இணையாக வந்திருக்க வேண்டிய பாடல். கொஞ்சம் சறுக்கி விட்டது. கபாலி படத்தில் “உலகம் ஒருவனுக்கா”, ” வீரத்துறந்தரா… ” என்று இரண்டு உரிமை மீட்புப் பாடல்கள் இருந்தது. இந்தப் படத்தில் ” உரிமையை மீட்போம் ” ” போராடுவோம்… ” தெருவிளக்கு வெளிச்சத்துல ” ” நிக்கல் நிக்கல் ” என்று நான்கு உணர்ச்சி மிகுந்த பாடல்கள். இந்த நான்கு பாடல்களும் வறுமையை அழிப்பது, நில உரிமையை மீட்பது, ஒற்றுமையாய் வாழ்வது என்று உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கையை அப்படியே கூறுகிறது. மெர்சல் படத்தில் அட்லி ” மருத்துவமனை அரசியல்” குறித்து கொஞ்சம் பற்ற வைத்ததை இந்தப் படத்தில் பாடல் வரியில் உபயோகித்திருக்கிறார்கள்.

கபாலியின் உலகம் ஒருவனுக்கா பாடலில் மேட்டுக்குடி வர்க்கத்தினரை பற்றி சில வரிகள் இருந்தது. அதனால் படம் பல எதிர்ப்புகளை சந்தித்தது. அதை போல் இந்தப் படத்தில் நிக்கல் நிக்கல் பாடல் ” கிளம்பு… கிளம்பு… விடிஞ்சிடுச்சு… ” வரிகளை கொண்டு அதிகார வர்க்கத்தினரை குறி வைத்து தாக்குவது போல் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்காகவே காலா படம் பல எதிர்ப்புகளை சந்திக்கும். நிலத்தை மீட்போம் என்றெல்லாம் வரிகள் வைத்திருப்பதால் இந்தப் படமும் கபாலி போன்று ரிலீசான முதல் இரண்டு நாட்களுக்கு வெகுவாக மட்டம் தட்டப்படும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

“போராடுவோம்… போராடுவோம்… ” என்ற பாடலும், ” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல… ” என்ற பாடலும் செம ஹிட் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கற்றவை பற்றவை பாடலின் விசில் மற்றும் கண்ணம்மா பாடலில் வரும் அனந்துவின் விசில் இரண்டும் இன்னும் சில நாட்களுக்கு பலருடைய செல் போன்களில்  அடிக்கடி ஒலிக்கும்.

Related Articles

ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடா... வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால...
வெ. இறையன்புவின் “நமக்குள் சில கேள... வெ. இறையன்பு மிக சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீட்டு நூலகம் வைத்திருப்பவர்களின் வீட்டில் கண்டிப்பாக அவருடைய புத்தகம் எதாவது இடம் ப...
ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதி... இ-வாலட்(E-Wallet) மூலம் ரயிலில் முன்பதிவு செய்யும்  புதிய வசதியைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ திறன்பேசி...
டீ குடிச்சதெல்லாம் ஒரு சாதனையா முதல்வரே!... எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் என்று ஊர் முழுக்க கட்அவுட் முளைத்துள்ளது. ...

Be the first to comment on "” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல ” – காலா பாடல்கள் எப்படி?"

Leave a comment

Your email address will not be published.


*