12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக்கொண்டே வந்தே விலை டீசலுக்கு 24 பைசா என வைத்து லிட்டருக்கு 77 . 83 ரூபாயாக மும்பையில் விற்கப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோலுக்கு 36 பைசா உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 77.83 ரூபாய் எனவும்,டீசலுக்கு 22 பைசா உயர்த்தப்பட்டு 68.75 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது.
கடந்த 12 நாட்களில் மட்டும் மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 11.02 ரூபாயும்,டீசலுக்கு 7.27 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இதுகுறித்து பேசும் போது ‘அரசு தலையிட்டு இந்த விலை உயர்வைக் குறைக்கும்’ என்றார்.
ஈரான் மற்றும் வெனிசுலாவில் சாதகமற்ற நிலை
மத்திய அமைச்சர் இது குறித்து பேசும் போது ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க மானியம் அளிக்கும் பட்சத்தில் அரசின் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி இல்லாமல் ஆகும்’ என்றார். இரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை மற்றும் வெனிசுலாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தல் ஆகியன விலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.
இந்திய எண்ணெய் நிறுவனம் தனது ஆண்டு தேவையில் எழுபது சதவீதத்தை மத்திய கிழக்கு உற்பத்தியாளர்களிடமிருந்தே கேட்டு பெறுகிறது. இந்திய எண்ணெய் நிறுவன தலைவர் சஞ்சீவ் சிங், ஈரானில் இருந்து இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசாங்கம் இதுவரை எந்த ஒரு அறிவுறுத்தலையும் தரவில்லை என்றார்
Be the first to comment on "12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது பெட்ரோல், டீசலின் விலை"