+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! – அசிரியர்கள் தயவு செய்து நாளை பள்ளிக்கு வாருங்கள்!

நாளை ( 16/05/2018) பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ரிசல்ட் என்றாலே அடுத்தநாள் பேப்பரை பார்க்க முடியாது. அவ்வளவு தற்கொலை செய்திகள் குவிந்து கிடக்கும். இனி வரும் காலங்களில் அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக சென்ற ஆண்டு தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, மாநில அளவில் முதலிடம் போன்ற ரேங்க் சிஸ்டம் இனி கிடையாது என்றும் மாணவர்களின் ரிசல்ட்டை வைத்து பள்ளி நிர்வாகங்கள் விளம்பரம் செய்யக் கூடாது என்று சில அறிவிப்புகள் வெளியிட்டது. இருந்தாலும் அவை எதுவும் முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை. தொலைக்காட்சியை தவிர மற்ற ஊடகங்களில் மாநில அளவில் மதிப்பெண் பெற்றவர்கள் என்றும் விளம்பர பதாகைகளில் மாணவ மாணவிகளின் புகைப்படத்தை வைத்து வியாபாரம் செய்தும் கல்வி வியாபார பிரச்சாரங்கள் நடந்து உள்ளது. அதே போல தமிழகத்தின் பல இடங்களில் மாணவ மாணவிகளின் தற்கொலைகள் நடந்து உள்ளது.இந்த வருடம் அது போன்ற செய்திகள் வரக் கூடாது என்பதற்காக தேர்வு முடிவுகளை ஆன்லைனில் வெளியிடாமல் நேரடியாக பள்ளி நிர்வாகம் மூலம் வெளியிட தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்து உள்ளது.

இது ஒரு வகையில் நல்ல முடிவு தான். தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் உடனே தவறான முடிவு எடுத்து விடுகிறார்கள். ஆனால் இந்த முறை பள்ளியில் வெளி ஆவதால் அங்கு ஆசிரியர்கள் இருப்பார்கள். மதிப்பெண் குறைந்த மாணவனை மற்றும் அவனுடைய பெற்றோரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுக்க ஏதுவாக இருக்கும். ஆசிரியப் பெருமக்களே நீங்களாவது கொஞ்சம் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைப் பேசுங்கள். (பெற்றோர்களுக்கு அது போன்ற வார்த்தைகள் நிச்சயம் வராது. பணம் கட்டி படிக்க வைத்ததால் கோபத்தில் தான் இருப்பார்கள்).

ஆசிரியர்களின் கவுன்சிலிங்கும் ஒரு அளவுக்குத் தான் இருக்கும். அவர்களால் முடிந்த அளவு தான் அவர்களால் செயல்பட முடியும். அதற்கு மேல் வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரு மாத காலங்களுக்கு தனியாக விடாதீர்கள் ( பெரிய சூரப்புலிகள் போல் சுற்றித் திரிவது எல்லாம் பொசுக்குனு தொங்கிடுதுங்க). சகஜமாகப் பேசுங்கள் அட்வைஸ் செய்து அறுத்து தொலைக்காதீர்கள். டீமோடிவேட் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். நாளைக்கு அனைத்து பள்ளிக் கூடங்களிலும் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் நடந்தாலும் நடக்கும். முடிந்தால் குடும்பத்தோடு சென்று வாருங்கள்.

 

 

Related Articles

சூர்யா – வெற்றிமாறன் இணையும் படத்த... அசுரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் பெயர் வாடிவாசல் என தகவல்கள் வந்துள்ளன. பொல்லாதவன், ...
இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு R... தெலுங்குக்கு எப்படி பாகுபலியோ கன்னட திரை உலகுக்கு கேஜிஎஃப் அப்படி! என்று ஏகப்பட்ட பில்டப் இந்தப் படத்துக்கு. பில்டப்புக்கு தகுந்தாற் போல படம் இருக்கிற...
கூர்கா படத்தின் கதை திருடப்பட்டதா? ̵... கூர்கா படம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 2 வது படம். ஹீரோவாக நடித்த முதல் படம் தர்ம பிரபு. ஜீவி யின் டார்லிங், ஜீவி யின் எனக்கு இன்னோரு பேரு இ...
தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வ... சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?சாப்பாடு முக்கியம்... அப்புறம் எனக்குப் பசிக்குமல்ல சாப்புடக்கூடாது... என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறக்க...

Be the first to comment on "+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! – அசிரியர்கள் தயவு செய்து நாளை பள்ளிக்கு வாருங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*