பொழுதுபோக்கு பூங்காவில் இயங்கும் பந்தைய காரில் தலைமுடி சிக்கி பெண் பலி

go-kart

ஹரியானா மாநிலம் பஞ்சகுளா பகுதியில் இயங்கி வரும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. யதவிந்த்ரா கார்டன்ஸ் என்ற அந்தப் பொழுதுபோக்கு பூங்காவில், பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த புனித் கவுர் என்ற இருபத்து எட்டு வயது பெண் பந்தைய காரில் சென்று கொண்டிருந்த போது தனது தலைமுடி கார் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் அமர்தீப் சிங், அவர்களின் இரண்டு வயது மகன்  மற்றும் குடும்பத்தாரோடு பொழுதுபோக்கு பூங்காவிற்கு வந்த புனித் ஆறு பந்தைய கார்களை முன்பதிவு செய்திருந்தார். தனது கணவருடன் ஒரே பந்தைய காரில் செல்ல முடிவெடுத்தார் புனித். ஒரு சுற்று சுற்றி வருவதற்குள், அவரது தலைமுடி காரின் சக்கரத்தில் சிக்கியது. உடனடியாக கார் நிறுத்தப்பட்ட போதும், அதன் மிதமிஞ்சிய வேகம் காரணமாக அவரது தலைமுடி மற்றும் உச்சந்தலை தனியாக பிய்த்து எறியப்பட்டிருக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

முதலில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட புனித் பிறகு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகச் சொல்லப்பட்டது. அந்தப் பொழுதுபோக்கு பூங்காவில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதற்காகவே ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்ததாகவும், அதையும் மீறி இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அந்தப் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு தான் இந்தப் பொழுதுபோக்கு பூங்காவைத் தனியாருக்கு பத்து ஆண்டுகளுக்கு  ஒப்பந்த அடிப்படையில் ஹரியானா மாநில சுற்றுலாத்துறை அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஆர்யாவின் கண்கள் இரக்கமற்றது? ஏன் தெரியு... இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்களின் படத்தில் அறிமுகமாகி பிறகு இயக்குனர் விஷ்ணு வர்தனின் அறிந்தும் அறியாமலும் படத்தில் மறு அறிமுகமானவர் நடிக...
இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிரு... 2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெர...
நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்ன... விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ...
ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து செயல்பட த... பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் உருக்காலை தொட...

Be the first to comment on "பொழுதுபோக்கு பூங்காவில் இயங்கும் பந்தைய காரில் தலைமுடி சிக்கி பெண் பலி"

Leave a comment

Your email address will not be published.


*