முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி இருக்கு?

11th std board exams

பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம்
வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண்டாம்
வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாலும் கல்லூரிகளில் காலடி எடுத்து
வைத்ததும் மிகப்பெரிய சறுக்கலை காண்கிறார்கள். இந்த வருட அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களின் முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால் அதன் தாக்கம் புரியும்.

பதினோறாம் வகுப்பு கணித பாடத்தை படிக்காததன் விளைவு பொறியியல் கல்லூரிகளில்
மாணவர்கள் எம் ஒன் முதல் எம் ஒன் வரையிலான காலகட்டதை மிகுந்த சிரமத்துடன் கடக்க
நேரிடுகிறது.

இன்ஜினியரிங் மாணவர்களின் நிலைமை தான் இப்படியென்றால் மருத்துவ மாணவர்களின்
நிலைமை அதைவிட பரிதாபமாக உள்ளது. அடிப்படை பாடங்களான பதினோறாம் வகுப்பு
உயிரியல் பாடங்களை படிக்காமல் செல்வதால் முதல் இரண்டு ஆண்டுகள் மிகுந்த சிரமத்துக்கு
உள்ளாகின்றனர். அது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்பதால் அந்தத்
தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் பதினோறாம் வகுப்பு பாடங்களுடன்
தொடர்புடையது. அதனால் தமிழக மாணவர்கள் பலரும் நல்ல கட்ஆப் பெற்றிருந்த போதிலும்
நீட் தேர்வில் பலத்த அடியை சந்தித்தனர்.

இந்நிலையில் இது போன்ற குளறுபடியான சூழல்களைத் தவிர்க்க இந்தாண்டு முதல்
பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டது.

எப்படி இருக்கு?

கடந்த சில தினங்களுக்கு முன்பு பதினோறாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் நடைபெற்ற கணிதத்தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் சிலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். வினாத்தாள்கள் சிபிஎஸ்இ போன்று பாடத்திற்கு உள்ளிருந்து
கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் படித்ததெல்லாம் பாடபுத்தகங்களில் குறிபிட்டிருக்கும் வினாக்களை மட்டுமே
படித்தோம். ஆதலால் பாடத்திற்கு உள்ளிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்
வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மாணவ மாணவிகள் தரப்பு இப்படியென்றால் ஆசிரியர்கள், ” வினாத்தாளை மாணவர்கள் மன
நிலையில் இல்லாமல் ஆசிரியர் மனநிலையில் இருந்து பார்த்தால் வினாத்தாள் எளிமையானதே.
பல வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டுள்ளது. பாடபுத்தகங்களை அந்த அளவுக்கு
நுணுக்கமாக கற்பிக்கும் அளவுக்கு ஆசிரியர்களுக்கு போதிய பாடவேளைகள் பத்தவில்லை ”
என்று கூறுகிறது.

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தால் பண்ணிரண்டாம் வகுப்பு
படித்துக்கொண்டே தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என்ற ஐடியா நன்றாக இருந்தாலும் அவர்கள்
பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களில் கவனம் செலுத்திக் கொண்டே இதையும் படிப்பதென்பது
சிரமமான ஒன்று. ஆகவே பதினோறாம் வகுப்பு தேர்வு குறித்து கவனம் மேற்கொள்வது
பள்ளிக்கல்வித்துறையின் கடமை.

Related Articles

நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது ம... யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்கள...
உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீ... ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கிரிக்கெட் விரும்பிகளுக்குக் கொண்டாட்டம் தான். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியர்களின...
உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1.Meghe dhake tara (1960) படத்தை இயக்கியவர் Ritwik katak Ramkinkar (1975)jukti, takko aar gappo (1974)titash ekti nadir naam (1973)Durbar...
எழுத்தாளர் தமிழ்மகனின் “மீன்மலர்&#... தமிழ்மகன் என்கிற பா. வெங்கடேசன் எழுதிய புத்தகம் மீன்மலர். இருபது வயதுகளிலயே எழுத தொடங்கி இளம் வயதிலயே தமிழக அரசின் இலக்கிய விருதுகளை வென்றுள்ளவர். மீன...

Be the first to comment on "முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி இருக்கு?"

Leave a comment

Your email address will not be published.


*