நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இளநீர் போன்றவை. இது மட்டுமின்றி நமது மாநிலத்துக்கு என்று வேறு சில பாரம்பரிய பானங்களும் உள்ளது. அவற்றில் ஒன்று பானகம். இன்னொன்று வசந்த நீர்.
மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்படும் பானங்களில் ஒன்று தான் பானகம். சுக்கு, ஏலக்காய், வெல்லம் போன்ற எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து செய்யப்படும் இந்தப் பானம் இன்றும் கிராமங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. திருவிழாக் காலங்களில் பெரும்பாலானோர் குடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதே போல காவிரிக் கரையோர மாவட்டங்களில் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் பானம் வசந்த நீர். இனிப்பும் புளிப்பும் சுவை கலந்த இந்த பானமும், பானகமும் உடற்சூட்டை நன்கு குறைக்கிறது.
கர்நாடவுக்கு சோல் கசடி!
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் கொடம்புளியைக் கொண்டு செய்யப் படும் இந்த பிங்க் கலர் பானம் உடல் எடை குறைப்பு, செரிமான தூண்டல், உடற்சூட்டை தணித்தல் போன்றவற்றிற்கு உகந்தது. இந்த கொடம்புளியை கேரளாவில் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
ஆந்திராவுக்கு மென்தி மஜ்ஜிக்கா!
ஆந்திராவில் வசிக்கும் கடற்கரையோர மக்களின் மனம் கவர்ந்த பானம். வறுத்த சீரகத்தை மோருடன் கலந்து தயார் செய்யப் படும் இந்த பானம் கால்சியம் நிறைந்தவை.
கேரளாவுக்கு ராகி அம்பலி!
தென்னிந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் சிறுதானிய வகையான கேழ் வரகு எனும் ராகியைப் பயன்படுத்தி தயார் செய்யப் படுகிறது.
இவை எல்லாம் நமது அண்டை மாநிலங்கள் உட்கொள்ளும் கோடை கால பானங்கள். இது ஒரு புறமிருக்க அனைத்து மாநில இளசுகளுமே கோடை காலத்தில் அதிகம் பயன்படுத்து எது என்று பார்த்தால் அது பாட்டில் குளிர் பானங்கள் தான். மேலும் ஐஸ் காபி, ஐஸ் டீ என்று கண்களுக்கு கவர்ச்சியானதை உட்கொள்கிறார்களே தவிர குளிர்ச்சியானதை குடிக்க மறுக்கிறார்கள். இது போன்ற இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்து உலகம் கூறுகிறது.
இதே போல் கோடை காலத்தில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் நோய் நீர்க்கடுப்பு. தொடர்ந்து வாகனங்களில் பயணிப்போர், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர், அடிக்கடி பாஸ்புட் சாப்பிடுவோர் போன்ற தரப்பினர் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர். அவர்கள் எல்லாம் மோர், இளநீர், கம்மங் கூழ் என்று கண்ணுக்கு சிக்கும் இயற்கை பானங்களை தயங்காமல் வாங்கி கப் கப் என்று அடியுங்கள். குறிப்பு தலைக்கு எண்ணெய் தேயுங்கள். இல்லையென்றால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு தொப்புளில் எண்ணெய் வைத்துக் கொண்டு படுக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாக வேண்டியது இருக்கும்.
Be the first to comment on "நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள் என்னென்ன?"