ஹைதராபாத் குஷைகுடா பகுதியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மீது கார் ஏறியதால் அவர் உயிர் இழந்துள்ளார். மது அருந்திவிட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு காரால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செருப்பு தைக்கும் தொழிலாளியான அசோக் வயது 30 ,தனது மகனுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த ஸ்கோடா ஆக்டேவியா (Skoda) கார் அசோக் மீது ஏறியதில் அவர் உயிரிழந்தார். காவல் ஆய்வாளர் ஒருவரின் மகள் உட்பட அந்தக் காரில் இருந்த நான்கு பேரும் பிடெக் மாணவிகள் என்றும், நான்கு பேரும் மது அருந்தியிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி
காரை ஓட்டிவந்தது காவல் துறை அதிகாரி ஒருவரின் மகள் என்பதால் காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்வதாக சம்பவம் நடந்த டிஏஇ காலணி பொது மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். நள்ளிரவுக்குப் பிறகு இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
‘சாலைகள் என்ன உங்கள் வீட்டு பெட்ரூமா? விபத்து என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்.’ இந்தக் குரல்கள் கேட்கும் வரை இந்தியாவில் இது போன்ற விபத்துகள் தொடரும்.
Be the first to comment on "சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கார் ஏற்றிய கல்லூரி மாணவி"