பல படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் அமைதிப்படை படத்தின் வசனங்கள்!

Amaithippadai movie dialogues
  1. வாங்கறதும் கொடுக்கறதும் தான் கௌரவம்னா உலகத்துக்குலயே கௌரவமானவன் வட்டிக்கடைக்காரன் தான்… என்னப் பொறுத்தவரைக்கும் கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட மனச மட்டும் எதிர்பார்க்குறவன் தான் மனுசன். தயவு செஞ்சு என்ன மனுசனா வாழ வுடுங்க…
  2. “ஆண்டவன் எனக்கு வேண்டிய அளவு கொடுத்திருக்கான்… “

“ஆண்டவன் உனக்குச் சொந்தக்காரனா… ஆண்டவன் எப்படியா கொடுப்பான்… “

  1. ” எதோ வாய்தவறி வந்துடுச்சு… “

” வாய் இருந்தா என்னவேணா பேசுவியா… “

  1. ” அப்பன் யாருன்னு தெரியாம பொறந்தது என்னோட தப்பா… “

” அணைச்சவன் யாருன்னு தெரியாம படுத்துக்கிடந்த அவளோட தப்பு… “

  1. என்ன பெத்தவள பத்தி குறை சொன்னாக் கூட நான் பொறுத்துக்குவேன்… என் மகள பத்தி பேசுன…
  2. ” ஏய் தம்பி… ஏய்… “

” அண்ணா… “

” இங்க வாப்பா… “

” என்னைங்களா… “

” அட உன்னையத் தான் வா… “

” ஏனப்பா… ஆளு ஆறு ஏழடி இருந்துட்டு அரமூடி தேங்காய குனிஞ்சு பொறுக்கிட்டு இருக்கியே… தப்பில்லையா அது… “

” மனுசன் தேங்கா பொறுக்கறது தப்புனா சாமிக்குத் தேங்கா உடைக்கறதும் தப்பு தானங்கணா… “

” எங்கட்டயே நாத்திகம் பேசுறியா நீ… “

” உண்மைய பேசுறதுக்குப் பேரு நாத்திகமாங்கணா… “

“டேய் மனுசனா பொறந்தா ஒரு லட்சியத்தோட இருக்கனும்… “

” அண்ணா குனிஞ்சு தேங்கா பொறுக்கறதானல லட்சியம் இல்லைன்னு நினைச்சுக்காதீங்க… எனக்கும் லட்சியம் இருக்குதுங்க… “

” என்ன… “

” பின்னால தெரியுதுல்லங் அரண்மனை… “

” அதுல வேலைக்குச் சேரனமாக்கும்… சொல்லு வேணா சேத்திவுட்றேன்… “

” இல்லைங்ணா… அந்த அரண்மனைய ஒருநாளு எனக்குச் சொந்தமாக்கிகனுங்… “

” ஏய்… அட பைத்தியக்காரா… சாகறதுக்குள்ள ஒருதடவ உள்ள போயி பாத்துட்டு வரன்னு சொல்லு அதுல ஒரு நியாயம் இருக்கு… சொந்தமாக்கரானாமா… ஏன்டா டேய் இதெல்லாம் முடியுமாடா உன்னால… “

” முடியும்னு நினைச்சக்காட்டிதானுங்க… தாமஸ் ஆல்வா எடிசன் கரண்ட்ட கண்டுபிடிச்சாரு… கொலம்பஸ் அமெரிக்காவ கண்டுபிடிச்சாரு… வாஸ்கோடகாமாவும் இந்தியாவுக்கு வந்தாருங்… “

” அட… “

” முடியாதுன்னு நெனச்சிருந்தா மனுசன் கொரங்காவே இருந்திருப்பானுங்க… இப்பங்ணா… முடியும்னு நெனச்சகாட்டித் தானுங்கனா வெள்ளக்காரன் நிலால போயி கால வச்சானுங்… முடியாதுன்னு நினைச்ச நாள தான் நாம இன்னும் நிலா சோறு ஊட்டிக்கிட்டே இருக்கறம்ங்க… “

” சரி இவ்ளவு விவரமா பேசுற… நாய் கரண்டுனமாதிரி பனியன் போட்ருக்க… ”

” நாய் தானுங் கரண்டுச்சு… ”

” காலைல ஒருத்தரு தேங்காய ஒடைச்சாருங்… “

” சேரி… “

” அத பொறுக்கறதுல எனக்கும் நாய்க்கும் சரியான போட்டிங்… “

” நாய் ஜெயிச்சிருச்சாக்கும்… “

” இல்லைங்… நான்தானுங் ஜெயிச்சேன்… “

” ஙே… “

” நாய கொன்னுபுட்டேனுங்… ”

” அடப்பாவி நாய போயி கொன்றுக்கான் பாரு… “

” நாம முன்னுக்கு வரனும்னா அப்றம் நாயென்ன மனுசனென்னங்க… ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதாங்… “

” ஒரு அரசியல்வாதிட்ட வேலைக்கு சேர்ற எல்லா தகுதியும் உன்ட்ட இருக்கு… ஆமா இவ்ளவு விவரத்தயும் வச்சிட்டு நீயேன் தேங்கா பொறுக்கிட்டு இருக்க… “

” எல்லா வேலையுந் தெரியுங்ணா… ஆனா கொஞ்சம் வாய் ஜாஸ்திங்க,.. அதனால எங்க வேலைக்குப் போனாலும் ஒரு நாளு நாளைல நம்மள தொரத்திவுட்றுவாங்க… ”

” வேற வேலைக்கு எதுக்குப் போற… “

” சிரிக்கவே தெரியாதவங்கலாம் அகில இந்திய அளவுல பெரிய பெரிய தலைவரா இருக்கறப்ப… சிந்திக்க தெரிஞ்சிட்டு நீ தேங்கா பொறுக்கிட்டு இருந்தின்னா இந்த தேசத்த யாரு காப்பாத்தறது… 

  1. ” அண்ணா இவன் ரூபாயோட மதிப்பு தெரியாம பேசிட்டு இருக்காண்ணா… “

” தெரியுங்க… இன்னைத்த நெலவரப்படிங்க அமெரிக்கன் டாலருக்கு 7 ஆரூபாய்ங்க… “

  1. ” என்னங் திடுதிப்புனு நம்மளைய வேலைக்கு சேத்திட்டிங்… “

” அட இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியல்ல… வெள்ளக்காரன் பேரெல்லம்… அதெல்லாம் எழுதிக்கொடுத்துரு… பொழுதோட மீட்டிங்ல பேசி நான் கைதட்டல் வாங்கிக்குறேன்… “

” அப்ப இத்தன நாளு என்னங்ணா பண்ணிட்டு இருந்திங்… “

” அட இத்தன நாளா ஒருத்தன் இருந்தானப்பா… திடுதிப்புனு எதிர்க்கட்சில போயி சேந்துட்டான்… “

  1. ” பாலும் வெள்ள தான் பால்டாயிலும் வெள்ள தான்… “
  2. ” போயும் போயும் மைக் செட் கட்றவன் மேலயாடி ஆசப்பட்டனு எங்க வீட்டுல ரொம்ப கத்துறாங்க… “

” எந்த தொழிலா இருந்தாலும் கேவலம் இல்லைங்க… இப்ப ஆடுமேச்சுட்டு இருந்தாரு யேசுநாதரு… உலகத்துல அவருக்கு சிலுவை இல்லாத இடமேயில்ல… அதேமாதிரி ஆப்ரகாம் லிங்கன் செருப்பு தெச்சிட்டு இருந்தாரு… அமெரிக்கா பூரா அவருக்கு சிலை இருக்குது… “

” இப்ப உங்களுக்கு எந்த இடத்துல சிலை வக்கப் போறாங்க… “

” ஐயோ நம்மூர்ல சிலை வைக்கறது ரொம்ப சுலபங்க… நாலு காசும் நாலு முக்கு வீரியமும் இருந்தாலே போதுங் சிலை வச்சிறாளாங்… என்ன கருப்பா சிலை வைப்பாங்க… காக்கா அசிங்கம் பண்ணி மூக்கு வெள்ளையாயி கடைசில மூஞ்சில கழுத மாதிரி ஆயிடுங்க… “

  1. ” உங்கம்மா கேட்டா என்னடி சொல்றது… “

” அவிங்கம்மாவ கொல பண்ணிருங்க… அழகான பொண்ணுங்களுக்கு அம்மாவே இருக்க கூடாது… “

  1. ” ஒவ்வொருத்தர் பொறந்த நாளைக்கு சாக்லேட் கொடுப்பாங்க… கேக் கொடுப்பாங்க… நீங்க அல்வா தர்றீங்க… “

” மத்தவங்கள பத்தி எனக்குத் தெரியாதுங்க… நான் எப்பவுமே எல்லாருக்கும் அல்வா கொடுக்கறதுதாங்க பழக்கம்… “

  1. ” பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே தான் நடாத்தி வந்த அல்வாக் கடையை அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் தம்பி அம்மாவாசை… இப்படிபட்ட உத்தமர்கள் தான் இந்த தேசத்துக்கு ஒரு வெளிச்சத்தை உண்டாக்க முடியும்… “
  2. ” அமாவாசைங்க அதனால நாளு நல்லா இருக்குன்னு மனு கொடுக்கறதுக்கு வந்திருக்கனுங்… பட் மை நேம் ஈஸ் நாகராஜ சோழன் எம்ஏ… சன் ஆப் ராஜேந்திர சோழன்… கிரான்ட் சன் ஆப் ராஜராஜ சோழன் தஞ்சாவூர்… அந்த ராஜ பரம்பரைல வந்தவங்க தாங்க நானு… அந்த பரம்பரைல வந்த கடைசி இளவரசன் நான்தாங்க… அந்த காலத்துல எங்க தாத்தா கூட்டுன ராஜ சபைக்கு மந்திரிங்க எல்லாம் வந்துட்டு இருந்தாங்க… இப்ப மந்திரி சபைக்கு நான் போக வேண்டியதா இருக்குதுங்… “
  3. ” எனக்கு சீட்டு இல்லை என்று சொல்லிவிட்டு மாமனுக்கும் மச்சானுக்கும் சீட்டு வழங்கிவிட்டார்கள்… தம்பி ராஜராஜ சோழனை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த மணிமாறனுக்கு எத்துனை அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்திய துணைகண்டத்துக்கு மட்டுமில்லாமல் ஆங்கிலேய பேரறிஞர்க்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் ரஷ்யாவிற்கும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகி இருக்கின்றோம்… “
  4. ” சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ… “
  5. ” ஜெயிச்சவனுக்கெல்லாம் ஜெ போட்டுத் தான்டா நாசமா போயிட்டிங்க… “
  6. ” எலக்சன்ல ஜெயிச்சவன் எனக்கே மீச இல்ல… சீட்டே கிடைக்காதவன் உனக்கெதுக்கு மீச… சரி… கள்ளு குடிச்சா என்படி வாய தொடைப்ப… இனிமே இப்படியே இருக்கட்டும்… இனாமே நம்மள அண்ணானு கூப்டு… “
  7. ” நம்ம சாதி சனத்துல ஒருத்தன் ஜெயிச்சு சட்டசபைய ஒரு கலக்கு கலக்குறான்னா அது நமக்குத் தான்டா பெரும… “
  8. ” எங்களுக்குப் பேராசையெல்லாம் கிடையாதுங்க… “

” பழைய அரண்மனைய மட்டும் அண்ணன்பேர்ல எழுதி வச்சிடுங்க… “

  1. ” என்ன கேட்கறது… “

” எல்லாத்தயும் கேளு… “

  1. ” எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அங்க எம்எல்ஏவா இருப்பானே நாகராஜ சோழன்… அவன்தான் உன் அப்பா… “
  2. ” ஏம்ப்பா நம்ம பசங்களாம் சாராயங்காச்சுனாங்கன்னு பிடிச்சு உள்ள வச்சிட்டியாமா… “

” சாராயங்காய்ச்சுறது சட்ட விரோதம் சார்… “

” அந்த ஈர வெங்காயம்லா எங்களுக்கு தெரியும்ல… அட சட்டவிரோதமா காச்சுனா தான் நாலு காசு சம்பாதிக்க முடியும்… பைத்தியக்காரனா இருக்கியே… “

  1. ” வந்தவுடனே படீர்னு கால்ல உழுந்துரு… கௌரவம் பாத்துட்டு இருக்காத… போட்டோ எடுக்கறவன கூட்டிட்டு வந்தியா… “

” மறந்துட்டனுங்க… “

” அட போடா டேய்… நீ எங்க முன்னேறப் போற… உனக்கெதுக்கடா அரசியல்லு… “

  1. ” உங்களுக்க எதுக்கு வாரிசு… காலம்போன கடைசில கட்சிய காப்பாத்துறதுக்கா… “
  2. ” வாழும்போது மலடிங்கற பட்டம் கிடைச்சாலும் பரவால… ஆனா நீங்க சாகும்போது அனாதைப் பொணங்குற பேரு உங்களுக்கு கிடைக்கணும்… “
  3. ” அரசியல் வாழ்க்கைல நான் தோத்துபோய்டுவேன்னு நினைக்கற சக்தி எந்த வடிவில இருந்தாலும் அத நா உயிரோட விடமாட்டன்… அப்படியொரு நினைப்பு எனக்கே வந்துதன்னா வை நான் சூசைட் பண்ணிக்குவேன்… “
  4. ” கொளத்துல குளிச்சாலும் மனசுக்கொரு சந்தோசமாத்தான் இருக்கதப்பா… “

” வாழ்க… “

” டேய் இதுக்கு ஆமான்னு சொல்லணும்டா… தொட்டதுக்கொல்லாம் வாழ்க வாழ்கன்ட்டு… நாய்ங்க… “

  1. ” ஜனங்க உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டாங்க… “

” நாம ஒன்னுமே பண்ணுலயேடா… “

” அதானுங்க… எதாவது பண்ணாதானுங் ஓட்டுப் போடுவாங்… நீங்க தான் ஒன்னுமே பண்றதில்லயே… “

  1. ” சண்ட போட்டா பழசெல்லாம் மறந்து போயிடுமா… அப்ப ஜனங்களுக்குள்ள நாமளே சண்டைய மூட்டிவிட்டம்னா  நாம செஞ்ச தப்பையெல்லாம் ஜனங்க மறந்துருவாங்க… நம்மளுக்கும் ஓட்டுப் போட்றுவாங்க… “
  2. ” அட கும்பிட்டு போங்க… “

” அட ஏன்டா மணியா… “

” பழக்கத்துலயே வச்சிருக்கனும்ங்க… இல்லைன்னா மறந்துடுவானுங்க… “

  1. ” தங்கள் மேல தப்பான அபிப்ராயம் வரும்போதெல்லாம் அத திசைதிருப்பதற்காக ஏதாவதொரு தகராறு ஏற்படுத்தறது அரசியல்வாதிங்க வழக்கம்… “
  2. ” மேல்சாதிக்கார நாய்க… அந்த நாய்கங்கறத நல்லா அழுத்தி சொல்லனும்… “
  3. ” சாதியாவும் மதமாவும் நம்ம சனங்க பிரிஞ்சு கிடக்குற வரைக்கும் நம்மள மாதிரி அரசியல்வாதிங்க குதிரை ஏறிட்டே இருக்க வேண்டியதுதான்… “

” அப்ப நம்மள மாதிரி ஆளுங்க சந்தோசமா இருக்கறதுக்குத் தான் சாதியவே கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு நினைக்குறேன்… சரி… அன்னைக்கு அமெரிக்காவ கொலம்பஸ் கண்டுபிடிச்சான்ன சொன்ன… இந்த சாதிக் கருமாந்தரத்த யாரு கண்டுபிடிச்சவன்…  “

”  மந்திரம் ஓதுறவனுங்க கண்டுபிடிச்சாங்க… மந்திரிமாருங்க அத கெட்டியா புடிச்சிட்டானுங்க… “

” ஓ அப்ப இந்த சாதிக் கருமாந்தரத்த ஒழிச்சிட்டம்னா ஜனங்க நிம்மதியா இருப்பாங்க போல இருக்குதே… “

” சனங்க நிம்மதியா இருப்பாங்க… நாம தான் சோத்துக்கு சிங்கி அடிக்கனும்… “

  1. ” குடியானவங்கட்ட சண்டை போட்டுட்டு நாளைக்கு கூலி வேலைன்னா யாருகிட்டடா போறது… “
  2. ” கக்கத்துல துண்ட சொருகிட்டு திரியுற இவனுங்களுக்கே இவ்வளவு வீம்பும் வீறாப்பும் இருக்குதுன்னா தோள்ல துண்ட போட்டுட்டு போற நமக்கு எவ்வளவு இருக்கும்… “
  3. ” அடிச்சதும் நல்லாதாதான் போச்சு… போய் போட்டோகிராபர கூட்டிட்டு வா… சாய்ந்தரம் மாலைமுரசுலயும் மாலை மலர்லயும் போட்டோ வரனும்… “

” அது எப்படிங்கணா அடிபட்ட உடனே போட்டோ எடுக்கனும்னு ஐடியா வந்துச்சுங்…  எனக்கு அது தோணவே இல்லைங்… “

” அட அது தோணாம போனநால தா மணியா எம்எல்ஏவா இருந்த நீ இப்ப எடுபிடியா இருக்க… “

  1. ” கவுர்மெண்ட் சொத்துக்கு சேதத்த ஏற்படுத்தனும் அதுதான் கரண்ட் பாலிடிக்சு… “
  2. ” அந்தக் காலத்துல இருந்த ராஜாமார்க எல்லாம் ரோட்டோரத்துல மரத்த வச்சானுங்க… இன்னிக்கு அந்த மரத்தையெல்லாம் வெட்டி ரோட்டு குறுக்கால போட்டா தான் ஆட்சியவே பிடிக்க முடியும் போல இருக்குது… டேய் மணியா நீ வரலாறு தெரிஞ்சிக்கணும்… கடவுளே இல்லைன்னு சொன்ன கட்சிக்காரங்கூட கோயில் இடிச்சதா சரித்திரம் கிடையாதுப்பா… ஆனா கடவுள் இருக்குதுன்னு சொல்ற கட்சிக்காரன் கோயில் இடிக்குறான்ல… ஊருக்குள்ள எல்லாரும் அம்மணமா திரியும்போது நாம மட்டும் கோமணத்த கட்டுனும்னா கோமாளி ஆயிடுவோம்… கோமாளி ஆகணுமா… மந்திரி ஆகணுமா… “

” மந்திரி ஆகணுங்… “

” அப்ப சாதிக்கலவரம் மாவட்டம் பூரா பரவனும்… “

  1. ” அரசியல்வாதிக்கு உதவாத அரசியல்வாதி இருக்கறதும் ஒன்னுதான் சாவறதும் ஒன்னுதான்… “
  2. ” நம்ம ஆளுங்களுக்கு அழுகாச்சினா ரொம்ப பிடிக்கும்… மூக்க சிந்திட்டே முத்திரை குத்துனா தான் அவிங்களுக்கோரு திருப்தி… “
  3. “அவன் வெட்டி நீ செத்துருந்தா பொதைக்கும்போது உன்ன மட்டுமா பொதைப்பாங்க… நீ செஞ்ச அநியாயம், அக்கிரமம் எல்லாத்தயும் சேத்தியில்ல பொதைப்பாங்க… ஜாதிக்கலவரத்தில் சாகடிக்கப்பட்டார் நாகராஜ சோழன் எம்எல்ஏ அப்டின்னு எட்டாங்கிளாஸ் பாடப்புத்தகத்துல உன்னப் பத்தி பெரிய இவரு மாதிரி எழுதுவாங்க… எதிர்கால மாணவர்கள் ஒரு தப்பான வரலாற படிக்கற மாதிரி ஆயிருக்கும், அதனால தான் தொலஞ்சிபோவதுன்னு உன்ன காப்பாத்துன… “
  4. ” அட அத மைக் கிடைச்சதுக்காக விடுற சவால்டா… அத எதிர்க்கட்சிக்காரனும் மதிக்கமாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம்… சவால் உட்டு மேடைல இருந்து இறங்கிப் போனதும் மறந்து போறதாச்சு… ஜனங்க தான் அத நியாபகம் வச்சு ஒருத்தன ஒருத்தன் அடிச்சிட்டு இருப்பானுங்க… “
  5. ” வன்முறைங்கறது கைப்பிடி இல்லாத கத்தி மாதிரி… ரெண்டு பக்கமும் கூர்மையா இருக்கும்… நீ வேணா பாரு கிழவா… அதுவே உன்ன டாருடாரா கிழிக்கப் போவுது… “
  6. ” அரசியல் புனிதமானது தான்… அதுல தன் இனத்துக்காக போராடுன நல்லவங்களும் இருக்குறாங்க… உன்ன மாதிரி இஷ்டத்துக்கு வாங்கித் திங்குற பன்னிகளும் இருக்குது… பன்னிகள் கூட்டம் அதிகமாயிட்டதால அதுல சாக்கடை நாத்தம் அடிக்குது… பன்னிகள அடிச்சுத் தூக்கிட்டு டெட்டால் ஊத்தி கழுவிட்டம்னா நீட்டா இருக்கும்… “
  7. ” ஒரு பொண்ணு தன் வாழ்நாள்ல அம்மாங்கற வார்த்தய கேட்காமலே வாழ்ந்து சாகறது எவ்வளவு பெரிய கொடுமை… “
  8. ” இமேஜ காப்பதறுதுக்காக கொல பண்ணாமலம் இருக்கத் தெரியும்… கொலை பண்ணிட்டு இமேஜ உருவாக்கவும் தெரியும்… “
  9. ” தீய முழுங்கச் சொன்னா திக்குன்னு இருக்கும்… தேனு தான… அடிச்சுப் பாக்கலாம்னு முடிவு பன்னிட்டேன்… “

Related Articles

விமல் ஆபாச படத்தில் நடிக்க வேண்டிய அவசிய... வாகை சூடவா என்ற அற்புதமான படத்தை தந்தவர் விமல். எப்போது அந்தப் படத்தைப் பார்த்தாலும் விமல் மீதான மரியாதை கூடிக்கொண்டே போகும். அப்படி ஒரு படம் அது. அப்...
“ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடி... இன்றைய தமிழ்சினிமாவின் மிக முக்கியமான நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜய்சேதுபதி மற்றொருவர் சிவகார்த்திகேயன். இருவருமே படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார...
ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!... எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்தி...
உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...

Be the first to comment on "பல படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் அமைதிப்படை படத்தின் வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*