இனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க முடியாது – ஐஆர்சிடிசியின் புதிய செயலியில் அசத்தலான பத்து அம்சங்கள்

இரயிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள்? இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காகத்தான் ஐஆர்சிடிசி ‘மெனு ஆன் இரயில்(Menu On Rail)’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தச் செயலியை நேற்று (திங்கட்கிழமை) இரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டு இருக்கிறார். இந்தச் செயலியை மக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம்.

 

அப்படி என்ன இருக்கிறது இந்தச் செயலியில்?

அடுத்த முறை நீங்கள் இரயிலில் உணவு தருவிப்பதற்கு முன்பாக, இந்தச் செயலியில் எந்த உணவு என்ன விலைக்கு விற்கிறது என்பதைச் சரிபார்த்து கொள்ளுங்கள். இரண்டு காரணங்களுக்காக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

1 ) மக்களுக்கு இரயிலில் விற்கப்படும் உணவின் விலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது

2 ) ஒப்பந்தக்காரர்கள் இரயில்களில் அதிக விலைக்கு உணவை விற்காமல் தடுப்பது

 

செயலியின் அசத்தலான பத்து அம்சங்கள்

1 ) தேநீர், காபி, சைவ மற்றும் அசைவ சாப்பாடு, குடிநீர் போன்றவற்றின் விலை பட்டியலை இந்தச் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2 ) 96 உட்பிரிவுகளின் கீழ்க் காலை உணவு, மிதமான உணவுகள், கோம்போ மீல்ஸ், சைவ உணவு , நீரிழிவு உணவுகள், ஜெயின் உணவு, இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

3 ) நான்கு விதமாக உணவு வகைகள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையே பானங்கள், காலை உணவு, சாப்பாடு மற்றும் ஏ-லா-கார்டே (தனிப்பட்ட உணவுகள்) ஆகும்.

4 ) சதாப்தி ரயிலில் 1 ஏ, 2 ஏ மற்றும் 3 ஏ வகுப்புகள், ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயிகளில் EC மற்றும் CC வகுப்புகளில் முன்பதிவு செய்யப்படும் உணவுப் பொருட்களையும் இந்தச் செயலியில் காணலாம்.

5 ) துரந்தோ ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்புகளில் வழங்கப்படும் உணவையும் , காதிமன் மற்றும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் உணவையும் செயலியில் காணலாம். தாமதமாக வரும் இரயில்களுக்கான உணவு பட்டியலையும் காணலாம்.

6 ) வரிவிதிப்பு குறித்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, செயலியில் காட்டப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அனைத்தும் வரிகளை உள்ளடக்கியவையாக இருக்கும்.

7 ) இந்தச் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதங்களில் இயங்கும்

8 ) திறன்பேசி செயலியாக மட்டுமல்லாமல், கணினியிலும் மடிக்கணினியிலும் கூட இந்தச் சேவையை பயணிகள் பெறலாம்

9 ) இந்தச் செயலியின் மூலம் பயணிகள் இரயிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், உணவின் தரத்தையும் அளவையும் அறிந்துகொள்ள முடிகிறது.

10 ) இந்தச் செயலியின் மூலம் அதிக அளவுக்கு உணவின் விலை வைத்து விற்பது தவிர்க்கப்படும்.

 

இரயில் பயணிகளின் உணவு அனுபவத்தை மேம்படுத்த இரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கோடு வருகிறது, சில நாட்களுக்கு முன்பு பயணிகள் வாங்கும் உணவிற்குக் கட்டாயம் இரசீது தரவேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

காதலை தாண்டி “காதலும் கடந்து போகும... சூதுகவ்வும் என்ற தனது முதல் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.  அவர் சில வருடங்கள் கழித்து ...
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
செக்ஸ் எஜூக்கேசன் இன் இந்தியா! – ம... இந்தியாவில் சில காலங்களுக்கு முன்பு பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே எதாவது ஒரு கொலைக் கார கிழவி கள்ளிப் பால் ஊத்தி சாகடிக்கும். அதை அடுத்து கருவை ஸ்கேன் ...
கழிவுகள் மறு சுழற்சி செய்ய திட்டங்கள் – ... கார்ப்பரேஷன் ஆணையர் எஸ். அனீஷ்சேகர் ஹோட்டல்கள், தியேட்டர் வளாகங்கள் மற்றும் திருமணமண்டபங்கள் ஆகியவற்றின் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்க்கு வெறும் இரண்...

Be the first to comment on "இனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க முடியாது – ஐஆர்சிடிசியின் புதிய செயலியில் அசத்தலான பத்து அம்சங்கள்"

Leave a comment

Your email address will not be published.


*