வாத்தியார் பிள்ளைகள், டாக்டர் பிள்ளைகள் எல்லாம் டாக்டர் ஆவதில் எந்த ஆச்சரியமுமில்லை!

நீட் தேர்வுக்கும் தமிழகத்துக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் குறிப்பிட்ட இடம் பிடித்து உள்ளார். இது பெரிய சாதனையாகக் கருதப்பட்டும் பெருமிதமாகப் பேசப்பட்டும் வருகிறது. அதே சமயம் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் கூலி வேலை செய்பவரின் மகள். இந்த இரண்டு மாணவிகளுமே இரண்டு ஆண்டுகள் நீட் தேர்வுக்காக காத்திருந்தவர்கள். ஆக இங்க குடும்ப அறிவும், குடும்ப நாகரிகமும், குடும்ப பொருளாதாரமும் மாறுபடுகிறது. கீர்த்தனா டெல்லியில் தங்கி பயிற்சி பெற்றவர். பிரதீபாவின் குடும்ப சூழலுக்கு இது கனவு மட்டுமே. பொருளாதாரம் அப்படி. எதாவது ஒரு டுபாக்கூர் கோச்சிங்,சென்டரில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து இருக்கும். ஆக இந்தியாவைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கு “அப்பாவின் செல்வாக்கு ” என்பது மிக முக்கியமான காரணியாக இருக்கிறது.

என்னுடைய அப்பா, டாக்டராக இருக்கிறார், என்னுடைய அப்பா அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார் என்ற போது கிடைக்கின்ற ஆதரவும், வசதி வாய்ப்புகளும் என்னுடைய அப்பா கூலி வேலை செய்பவர் என்பவருக்கு கிடைப்பது இல்லை. கீர்த்தனா போன்ற மாணவிகளுக்கு அப்பாவின் பெயர் சொன்னாலே எல்லாம்  கிடைத்துவிடுகிறது. ஆனால் பிரதீபா போன்ற மாணவிகள் முழுக்க முழுக்க தன்னுடைய உழைப்பால், பல இடங்களில் அசிங்கப்பட்டு முன்னேற வேண்டி இருக்கும். ஆக இங்கு எல்லாமே அப்பாவின் கைகளில் தான் உள்ளது.

ஆனால் கூலி வேலை செய்யும் பிள்ளைகளின் அப்பாக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தான் இங்கு பேசப்பட வேண்டிய விசியம். காலை எழுந்ததும் சோத்துச்சட்டியைக் கட்டிக்கொண்டு அவசர அவசரமாக வேலைக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்று முதலாளிகளிடம் ஏக பேச்சுக்கள் வாங்கி மாங்கு மாங்கு என்று வேலை செய்ய வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் சக்கையாக வருகிறார்கள். உடல்வலி அப்படி இருக்கும். அந்த வலிகளைத் தாங்க அவர்கள் கண்டிப்பாக குடித்தே ஆக வேண்டும் என்ற சூழல். ஆக அவர்களுக்குச் “சிந்திப்பதற்கும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும்” போதிய நேரம் இல்லை. ஆதலால் பயங்கர வளர்ச்சி அடைந்துவரும் இந்த சமூகத்தை கண்டு பயந்துகிடக்கிறார்கள் அப்பாக்கள். அச்சுறுத்தம் சமூகம் அவர்களை முட்டாளாகவே வைத்து இருக்கத்தான் ஆசைப்படுகிறது. அவனும் தெரிந்துகொள்ளட்டுமே அவனும் நன்றாகப் பிழைக்கட்டுமே என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்க வேண்டும். அது இல்லாதவரை அனிதா, பிரதீபா போன்ற மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

Related Articles

12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது ... 12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக...
சூர்யா – வெற்றிமாறன் இணையும் படத்த... அசுரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் பெயர் வாடிவாசல் என தகவல்கள் வந்துள்ளன. பொல்லாதவன், ...
ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக... அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடை...
பிரதமர் மோடியின் பயிர் காப்பீடு திட்டத்த... பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளைக் காட்டிலும், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதித்திருப்பது விவசாய அமைச்சகத்தின் கடந்த ஆண்ட...

Be the first to comment on "வாத்தியார் பிள்ளைகள், டாக்டர் பிள்ளைகள் எல்லாம் டாக்டர் ஆவதில் எந்த ஆச்சரியமுமில்லை!"

Leave a comment

Your email address will not be published.


*