கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் உறுப்பு “தானத்தில்” தமிழக அரசு இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அதற்காக மத்திய அரசின் விருதையும் கூட பெற்று உள்ளது. இந்நிலையில் தற்போது உடல் உறுப்பு “மாற்றத்தில்” முறைகேடு நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக மக்களிடம் இருந்து உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதை
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மக்களுக்குத் தான் முதலில் சென்று அடைந்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நோயாளிகளை விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு உடல் உறுப்புகள் தாரைவார்க்கப் பட்டிருக்கிறது.
உடல் உறுப்புத் தானத்தால் உடல் உறுப்புகள் பெற முடியாமல் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கையில் 95 வெளிநாட்டவருக்கு தானம் செய்தது எதற்காக? தமிழக மக்கள் தானமாக செய்த உடல் உறுப்புகளை ஏற்றுமதி செய்வதில் எவ்வளவு பெட்டி கிடைத்தது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
தமிழக மக்கள் தானம் செய்த உடல் உறுப்புக்களை உடல் உறுப்பு தான நெறிமுறைப்படி அப்பகுதியில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு முதலில் அளிக்க வேண்டும். ஒருவேளை அது பொருந்தாத சூழல் என்றால் அதை அடுத்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அளிக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு அளிக்க முடிகிறதா என்று பார்த்து அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதை அடுத்து தான் மற்ற வெளிநாட்டினருக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை.
இப்படி வெளிநாட்டினருக்கு தானமாக அளித்ததற்கு சில காரணங்களும் முறைகேடு செய்தவர்களின் பக்கத்தில் இருந்து வந்து உள்ளது. அது, ஒரு நாட்டினரின் உறுப்பு அதே நாட்டிலிலுள்ள மக்களுக்கு பொருந்தாது என்பது. கேட்கும்போதே இந்த காரணம் மிகப் பெரிய அபத்தமாகத் தெரிகிறது. இது குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்படுமா என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
Be the first to comment on "உடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்த முறைகேடு!"