மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீசனின் மனைவிக்கு என்ன பதில் சொல்லப் போறோம்?

வள்ளியூர் அருகே விஜய நாராயணம் சிற்றாற்று பகுதியில் மணல் திருடப் படுவதாக தகவல் கிடைத்து சோதனைக்கு சென்ற காவலர் ஜெகதீசனை ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று உள்ளது. கர்ப்பமாக இருக்கும் அவருடைய மனைவிக்கு இந்த செய்தி எப்படிபட்ட அதிர்ச்சியை தந்து இருக்கும். தகவல் கிடைத்ததும் மற்ற அரசு ஊழியர்களைப் போல, காவலர்களைப் போல எனக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்திருந்தால் அவருக்கு இந்த கதி நேர்ந்து இருக்குமா? நேர்மையாகப் பணி ஆற்றியதன் விளைவு இன்று அவர் உயிருடன் இல்லை. நேர்மையாக பணி ஆற்றியது ஒரு குற்றமா? ஏன் நேர்மையானவர்களை இந்த உலகம் புறக்கணித்து கொண்டே இருக்கிறது.

 

மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு?

தடை விதிப்பது, அபராதம் விதிப்பது, தண்டனை கொடுப்பது போன்ற பாசாங்கு வேலைகளை செய்து கொண்டிருக்கும் தற்போதைய ஆளுங்கட்சி அரசே இந்தக் குற்றச் செயலுக்கு துணை புரிகிறதாக சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது. இது உண்ம் என்றே எடுத்துக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் மணல்கள் அரசியல்வாதிகள் துணையுடன் அரசு அதிகாரிகளுடன் கொள்ளை போகிறது. பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தான் தற்போது அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில்  ஒவ்வொரு மூட்டையாக எடுத்துச் சென்றும் இரவு வேளைகளில் மாட்டு வண்டிகள் மூலமாக எடுத்துச் சென்றும் மணல் கடத்தல் நடை பெற்று வருகிறது. இந்த முறையில் மணல் கொள்ளை செய்து குடோன் அமைத்து வைத்தவர் அப்பகுதி கனிம வளத்துறை அதிகாரி ஜெயந்தியால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆறுகள் சிதைந்து கொண்டிருக்கிறது.

 

Related Articles

இரா. பார்த்திபன் ஒரு பார்வை! – காந... இப்போது வரும் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டாள், ஏதோ அவர்கள் பெரிய சாதனையை படைத்து விட்டது போல், உடனடியாக அடுத்தவர்க...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
தவறான வழியில் பணம் சம்பாதித்தால் நாம் என... கமல்ஹாசன் தன்னுடைய காதலா காதலா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். மிக முக்கியமான வசனம் அது.  நல்ல வேலைக்குப் போயி உருப்பட்ற ஐடியா இல்லையா என்று டெல்லி...
திருடர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய்... வெண்ணிலா கபடி குழு என்ற  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த மிக முக்கியமான படைப்பாளி, இயக்குனர் சுசூந்திரன். வெண்ணிலா கபடி குழுவைத் தொடர்ந்து எழ...

Be the first to comment on "மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீசனின் மனைவிக்கு என்ன பதில் சொல்லப் போறோம்?"

Leave a comment

Your email address will not be published.


*