இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருக்கிறது!

மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி சொல்லி மாளாது.

மருத்துவ சீட் பெறுவதில் நிறைய முறைகேடு நடக்கிறது அதனை தடுக்கத் தான் நீட் தேர்வு கொண்டு வந்தோம் என்கிறது மத்திய மாநில அரசு. இந்த நீட் தேர்வினால் அனிதா உயிரிழந்த போது தின இந்துவில் நடிகர் சூர்யாவின் நடுப்பக்க கட்டுரை வெளியானது. உடனே அடுத்த நாளே அதை எதிர்த்து தமிழிசை சவுந்தர்ராஜன், ” தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டது. அப்போது எல்லாம் சூர்யா எங்கே போனார் ” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அப்படி கேள்வி எழுப்பியதால் சூர்யா ரசிகர்களிடம் வகையாக வாங்கிக்கொண்டார். நியாயப்படி அந்த சமயங்களில் குரல் கொடுத்து அந்த கல்விச் சுரண்டலை தடுத்திருக்க வேண்டியது நல்ல அரசியல்வாதியின் வேலை. அது நடிகரின் வேலை அல்ல.

இன்னும் சில தினங்களில் பொறியியல் கல்லூரிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் செய்திகள் வந்துகொண்டிருந்தது. இப்போது அது உறுதி என்பது தெரிய வந்துள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் டிவி செய்த ஒரு உருப்படியான விஷியம் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பிய நீயா நானா நிகழ்ச்சி தான். ஏழ்மை நிலையில் இருந்து கொண்டும்

பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் இடம் பெற்றிருந்தனர். அந்த மாணவர்கள் தங்களது அப்பாவின் இயலாமையையும் இன்னொரு அப்பாவாக, அம்மாவாக இருக்கும் ஆசிரியர்களைப் பற்றியும் பேசியது சமூக வலை தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் தின இந்துவின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ். இன்றைய கல்வி சூழலை பற்றி பேசியவர் இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருக்கிறது என்றும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தகவல் தெரிவித்தார். மொத்ததில் இன்ஜினியரிங் கல்லூரிகள் செய்து வரும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் போதும் என்ற கருத்து ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் இன்ஜினியரிங் படிப்பும் ஏழை மாணவர்களுக்கு எட்டாத படிப்பாக மாறிவிடுமோ என்ற பயமும் இருக்கத் தான் செய்கிறது.

Related Articles

தமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு த... தெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் ...
நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்க...
“நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க... " நாளைக்கு எனக்கு முத நா காலேஜ் இருக்கு... "" லா காலேஜ் படிச்சு என்னத்த கிழிக்கப் போற... உன்ன நம்பி நாங்க இருக்கோம் பாரு... "  " எ...
சமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்... இளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜர...

Be the first to comment on "இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு வர இருக்கிறது!"

Leave a comment

Your email address will not be published.


*