கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அதை செய்தேன் தெரியுமா… இதை செய்தேன் தெரியுமா என்று கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெரு வெள்ளம் வாட்டி எடுத்த போது நியாயப்படி மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருள்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்துவிட்டு ” எங்களை பார்த்தால் சுனாமியே பயந்து நடுங்கும்… ” ” எங்கள் அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளைப் பார்த்து வெள்ளம் வராத பகுதிகளில் உள்ள மக்கள் ஐயோ எங்கள் பகுதிக்கும் வெள்ளம் வந்திருக்க கூடாதா என்று வருந்தினர் ” இப்படி எல்லாம் வாய்க்கு வந்ததை அடித்துவிட்டார்கள். இப்போது மீண்டும் அதை தொடங்கிவிட்டார்கள். அதற்கு நெட்டிசன்கள் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். அவர்கள் என்ன என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
''முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூற, ஜெயலலிதாவின் ஆன்மா பழனிசாமிக்குள் புகுந்த காரணத்தால் ஜெயலலிதாவிற்கு கிடைக்க வேண்டிய சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் முதலமைச்சருக்கே தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர்ஆனர் என்றும், இனி எம்.ஜி.ஆர் ஆன்மா புகுந்திருக்கிறது, கருணாநிதி ஆன்மா புகுந்திருக்கிறது என்று யார் யாரை கூறினாலும் அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பினை யார் உடலில் ஆன்மா புகுந்து இருக்கிறதோ அவர் மீது காட்டலாம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
Be the first to comment on "”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா”, “எங்கள் ஆட்சியைக் கண்டு வெள்ளம் பயந்துவிட்டது” – அமைச்சர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்!"