கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனின் வீடியோ வைரல் ஆகி
வருகிறது. தளபதி விஜயின் தீவிர ரசிகர் ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் அந்த சிறுவனை
கண்டு சிரிக்காத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
கோழி கலர் கலராக அசிங்கம் செய்து வைத்ததைப் போல ஒரு மண்டை, பட்டன்கள் ஒழுங்காகப்
போடப்படாத சட்டை, இழுத்துவிட்டால் டப்பென்று தரையில் விழும் அளவுக்கு தொள தொள
டவுசர் என்று பார்ப்பதற்கு எலிக்குஞ்சு போன்று இருக்கும் அந்தச் சிறுவன் விஜய் ரசிகன் என்கிற
பெயரில் பேசும் வார்த்தைகள் இருக்கிறதே. காதில் ரத்தம் வந்துவிடும் ! பையன் அவ்வளவு
வெறியோடு இருக்காப்ளயாம்.
நடிகர் விஜய் இது போன்ற பொடுசுகளின் அரவேக்காட்டு தனமான வீடியோக்களை கவனித்து
தான் வருகிறாரா? கவனித்தால் இது குறித்து கண்டிப்பு நடவடிக்கை எடுத்திருக்க
வேண்டுமல்லவா? அரிவாளை நீட்டி திட்டும் சிறுவர்கள், கெட்ட வார்த்தையால் திட்டும்
சிறுவர்கள் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உள்ள சிறுவர்கள் பள்ளிக்
கூடம் செல்கிறார்களா? பள்ளிக்கூடம் சென்றிருந்தால் ஆசிரியரின் கண்டிப்புக்கு பயந்து அடங்கி
இருந்திருக்க வேண்டுமே ? ஆசிரியர்களுக்கு தான் தெரியவில்லை என்றால் பெற்றோர்கள் என்ன
செய்து கொண்டிருக்கிறார்கள் ? அந்த சிறுவர்களின் அக்கம் பக்கத்தினர், உறவினர் யாருக்குமே
அறிவு என்பதே இல்லையா ?
இப்படிலாம் பேசக் கூடாதுப்பா… இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேசணும் என்று நல்
ஒழுக்கத்தை கற்றுத் தராததால் இன்று சந்தி சிரிக்கிறது. பிள்ளைகளின் செயலில் வாயிலிருந்து
வரும் வார்த்தையில் பெற்றோர்களின் வளர்ப்பு தெரியும் என்பார்கள். அந்த விதத்தில் இது
போன்ற சிறுவர்களை பெற்று எடுத்தவர்கள் என்ன லட்சணத்தில் பிள்ளை வளர்த்தார்களோ ?
செல்போன் மோகம் பெற்றோர்களையே தலைகால் புரியாமல் ஆட வைத்திருக்கும் நிலையில்
பிள்ளைகள் மட்டும் எப்படி அமைதியாக இருப்பார்கள் ?
Be the first to comment on "விரல் அளவு கூட இல்ல! இதுல ஒருவிரல் புரட்சியாம் !"