கடந்த டிசம்பர் 6 ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது. முன்பிருந்ததை விட இப்போது அம்பேத்கரின் கருத்தியலில் அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அம்பேத்கரின் புத்தகங்கள் இப்போது அதிக அளவில் விற்பனை ஆகவும் தொடங்கி உள்ளது. சமத்துவம் பேணுவோம் என்று சபதம் எடுத்துக் கொண்ட இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளனர்.
அப்படிப்பட்ட இளைஞர்களும் இதே இந்தியாவில் இருக்கின்றனர். இதே இந்தியாவில் தான் அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டு உயர் சாதிப் பெண்களை காதலிப்போம் என்று சபதம் எடுக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் தான் என்று இயக்குனர் பா. ரஞ்சித் உரக்கப் பேசிய அதே நாளில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அவர்கள் எடுத்த சபதம் :
- காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம்…
- திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் கவுண்டர் பெண்ணை திருமணம் செய்வோம்….
- கட்டி அணைப்போம் கட்டி அணைப்போம் முதலியார் பெண்ணை கட்டி அனைப்போம்…
சபதம் எப்படி? கேட்டதும் புல்லரித்துவிட்டது அல்லவா? நாட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமான சபதம் இது!
காதலிப்போம் காதலிப்போம் என்று சபதம் எடுத்து காதலித்தால் அது உண்மையான காதலா? பலர் விமர்சிக்கும் வகையில் இது நாடக காதலாக தானே அமையும்!
ஆண்கள் இப்படி வேற்று சாதிப் பெண்களை காதலிப்போம் என சபதம் எடுத்தால்உங்கள் சாதிப் பெண்கள் என்ன செய்வார்கள்? தொழிலுக்கு அனுப்புவீர்களா? சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர் பலர். மொத்தத்தில் இப்படி ஒரு சபதம் அருவெறுக்கத் தக்கது. அதற்காக பெண்களை தொழிலுக்கு அனுப்புவீர்களா? என்று கேள்வி எழுப்புவதும் அருவெருப்பான ஒன்று.
சபதம் எடுத்த இந்த இளைஞர்கள் கைது செய்யப்படுவார்களா? வன்முறையை உண்டாக்க கூடிய வகையில் பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள் முதல் ஆர்வக் கோளாறு இளைஞர்கள் வரை வாயடங்காமல் உளறிக் கொட்டியதால் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் இந்த இளைஞர்கள் என்ன செய்யப்படுவார்கள்?
நேற்று வரை மேற்கண்ட விவாதங்கள் தான் நடந்துகொண்டிருந்தது. அந்த வீடியோவில் காணப்பட்ட இளைஞர்களை கண்டபடி பேசித் தள்ளினார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை யாருமே அறிய முற்படாமல் சிக்கிடானுங்க இனி சிதைச்சிட வேண்டியதுதான் என்று எவ்வளவு மட்டம் தட்டி பேச முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டி பேசினார்கள் பேஸ்புக், டுவிட்டர், வாட்சப் போராளிகள்.
ஆனால் உண்மையான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் முழக்கமிட்ட தகவல்கள் முற்றிலும் வேறானவை. போலி வீடியோவை செய்தியாக வெளியிட்ட செய்தி தொலைக்காட்சிகள் உண்மையான வீடியோவை பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏனோ?
Be the first to comment on "ஒருத்தரை மட்டம் தட்ட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! – அம்பேத்கர் படத்தை வைத்து இளைஞர்கள் எடுத்த சபதம் என்ன?"