” அண்ணன் செத்த அடுத்த பதினாவது நாள் அவன் தம்பி வந்தாண்டா… ” துப்பாக்கி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் வெளியான கொடி படத்திலும் இதே போன்ற கதையை காண முடியும். நிஜத்தில் இது நடந்தால் எப்படி இருக்கும்!
தமிழகத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அந்தத் தொகுதிகள் எல்லாம் காலியாக இருக்க திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவது ஏன்? என்று எதிர் கட்சி கேள்வி கேட்டு, எப்படியாவது இந்த தேர்தலை தள்ளி வைக்க அல்லது நிறுத்தி வைக்கவே முற்பட்டது.
கஜா புயல் காரணமாக ஏற்கனவே நடக்க இருந்த திருவாரூர் தேர்தல் தள்ளிப் போய் தற்போது நடக்க உள்ளது. சுமார் 2. 5 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் தற்போது தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக வழக்குத் தொடுக்க நீதிமன்றம் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
இதை அடுத்து திருவாரூரில் யாரை திமுக வேட்பாளராக நிறுத்தலாம் என்று இரண்டு நாட்களாக கட்சி உறுப்பினர்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்தது. அதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிற்கிறார் என்ற வதந்திகள் எல்லாம் கூட பரவ ஆரம்பித்தது.
நேற்று மாலை திருவாரூர் தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் நிற்கிறார் என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்தது. அப்போதே திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப் பட்டுவிட்டது என்று பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது.
பூண்டி கலைவாணன் பற்றி பார்ப்பதற்கு முன் அவருடைய அண்ணன் பூண்டி கலைச் செலவனைப் பற்றிப் பார்ப்போம்.
பூண்டி கலைச்செல்வன் திமுக வின் தீவிர விசுவாசி. ஒரு தொண்டனாக திமுக சார்பில் ஏகப்பட்ட பணிகள் செய்து நல்ல செல்வாக்குள்ள மனிதராக உயர்ந்தவர். திமு வின் மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்தவர். அரசியல் பகை காரணமாக அவர் கொலை செய்யப் பட,
அந்தப் பதவி பூண்டி கலைவாணனுக்கு கிடைத்தது. கடந்த 2007 ம் ஆண்டு முதலே திமுக கட்சியின் தீவிர விசுவாசியாக செயலாற்றி வந்தவர். தனது தொகுதியில் தனக்கு அதிக செல்வாக்கு இருந்த போதிலும் கலைஞருக்காக இரண்டு முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை விட்டுக் கொடுத்தார். அதை அடுத்து தற்போது கூட தேர்தலில் அவர் ஸ்டாலினை வழிமொழிய கட்சியோ இந்த முறை நீங்கள் நில்லுங்கள் என்று கட்சியின் உண்மையான தொண்டனுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது.
கிட்டத்தட்ட திமுக வெற்றி பெற்றுவிட்டது என்றே அரசியல் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Be the first to comment on "அண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி கலைவாணன்! – திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதியா?!"